தமிழ்நாடு

புரசைவாக்கம் முதல் மூலகொத்தளம் வரை.. இடைவிடாது அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்.. துணை முதலமைச்சர் அசத்தல்!

சென்னை மூலகொத்தளத்தில் ரூ.14.31 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் திருமண மாளிகையை திறந்து வைத்து, 10 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார் துணை முதலமைச்சர்.

புரசைவாக்கம் முதல் மூலகொத்தளம் வரை.. இடைவிடாது அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்.. துணை முதலமைச்சர் அசத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (24.2.2026) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி, புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலையில் 10.89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன சலவை நிலையம் மற்றும் 12.68 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள கன்னிகாபுரம் விளையாட்டுத் திடல் மற்றும் இராயபுரம் சட்டமன்ற தொகுதி, மூலகொத்தளத்தில் 14.31 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் திருமண மாளிகையை திறந்து வைத்து, 10 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.

புரசைவாக்கம் முதல் மூலகொத்தளம் வரை.. இடைவிடாது அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்.. துணை முதலமைச்சர் அசத்தல்!

=> புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலை நவீன சலவை நிலையம் :

புரசைவாக்கம் நவீன சலவை நிலையமானது தரைதளம் மற்றும் முதல் தளங்களுடன் மொத்தம் 60 எண்ணிக்கையிலான சலவை நிலையம் அதில் 30 எண்ணிக்கையிலான சலவை இயந்திரங்கள் (Washing Machines), 30 எண்ணிக்கையிலான சலவை கற்கள் (Washing Stones) மற்றும் 6 எண்ணிக்கையிலான உலர்வை இயந்திரங்கள் (Dryers), 60 எண்ணிக்கையிலான சேமிப்பு அறைகள் (Store Rooms) மற்றும் நவீன கழிப்பறை  வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.   

புரசைவாக்கம் முதல் மூலகொத்தளம் வரை.. இடைவிடாது அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்.. துணை முதலமைச்சர் அசத்தல்!
புரசைவாக்கம் முதல் மூலகொத்தளம் வரை.. இடைவிடாது அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்.. துணை முதலமைச்சர் அசத்தல்!

=> கன்னிகாபுரம் விளையாட்டுத் திடல் :

3.75 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலில் 14,708 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில், இறகு பந்து கூடம் மற்றும் உடற்பயிற்சி கூடமும், முதல் தளத்தில் டேபிள் டென்னிஸ், சதுரங்க விளையாட்டு, கேரம் விளையாட்டு பகுதியும், இரண்டாம் தளத்தில் குத்துச்சண்டை வளையம் போன்ற உட்புற விளையாட்டு அரங்கம்  ஆகியவை அதிநவன வசதியுடன் கட்டப்பட்டுள்ளன.

புரசைவாக்கம் முதல் மூலகொத்தளம் வரை.. இடைவிடாது அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்.. துணை முதலமைச்சர் அசத்தல்!

கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலில் கால்பந்து மைதானம், 280 நபர்கள் அமரக்கூடிய வகையில் 2 பார்வையாளர்கள் மாடம், சிலம்பம் மைதானம், கபடி மைதானம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, 3 மீட்டர் அகல நடைபாதை, அக்குபஞ்சர் நடைபாதை, வெளிப்புற உடற்பயிற்சி உபகரணங்கள், குடிநீர் வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் நவீன கழிப்பறை வசதிகளுடன்  அமைக்கப்பட்டுள்ளன. வடசென்னை பகுதியின் பழமையான விளையாட்டு திடல் திராவிட மாடல் ஆட்சியில் மேம்படுத்தி பல்வேறு  விளையாட்டு வசதிகளுடனும், சிறப்பம்சங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளது.

புரசைவாக்கம் முதல் மூலகொத்தளம் வரை.. இடைவிடாது அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்.. துணை முதலமைச்சர் அசத்தல்!

=> இராயபுரம் முதல்வர் திருமண மாளிகை :

இராயபுரம் முதல்வர் திருமண மாளிகையானது 0.67 ஏக்கர் மொத்த நிலப்பரப்பில் 43,881 சதுர அடி கட்டடப் பரப்பளவில் அடித்தளம், தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இத்திருமண மாளிகையில் 55 எண்ணிக்கையிலான 4 சக்கர வாகனம் நிறுத்தும் வசதிகளும், 60 எண்ணிக்கையிலான 2 சக்கர வாகனம் நிறுத்தும் வசதிகளும், சமையலறை கூடமும், 20 எண்ணிக்கையிலான நவீன கழிப்பறை வசதிகளும், 2 எண்ணிக்கையிலான மின்தூக்கி வசதிகளும், 750 இருக்கை வசதிகளுடன் கூடிய திருமண மண்டபமும், ஒரே சமயத்தில் 175 நபர்கள் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் உணவுக்கூடமும் மற்றும் 12 எண்ணிக்கையிலான தங்கும் அறைகளுடன் கட்டப்பட்டுள்ளன. 

banner

Related Stories

Related Stories