தமிழ்நாடு

மொத்தம் ரூ.16 கோடியில்.. உள்விளையாட்டரங்கம் முதல் திருமண மண்டபம் வரை.. திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!

இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் திருமண மாளிகை, முத்தமிழறிஞர் கலைஞர் திருமண மண்டபம் ஆகிய 3 திட்டப்பணிகளை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மொத்தம் ரூ.16 கோடியில்.. உள்விளையாட்டரங்கம் முதல் திருமண மண்டபம் வரை.. திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் திருமண மாளிகை, முத்தமிழறிஞர் கலைஞர் திருமண மண்டபம் என மொத்தம் 16.13 கோடியில் முடிவுற்ற 3 திட்டப்பணிகளை திறந்து வைத்து, சென்னை நடுநிலைப்பள்ளி புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார். 

மொத்தம் ரூ.16 கோடியில்.. உள்விளையாட்டரங்கம் முதல் திருமண மண்டபம் வரை.. திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!

=> பேகம் 5-வது தெரு இறகுப் பந்து விளையாட்டு உள்ளரங்க மைதானம் :

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேகம் 5 வது தெருவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மாமன்ற உறுப்பினர் திருமதி வெ. கமலா செழியன் அவர்களின் வார்டு மேம்பாட்டு  நிதியின் கீழ் 1.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,250 சதுரஅடி பரப்பளவு கொண்ட இறகுப் பந்து விளையாட்டு உள்ளரங்க மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.  

மொத்தம் ரூ.16 கோடியில்.. உள்விளையாட்டரங்கம் முதல் திருமண மண்டபம் வரை.. திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!

=> இராஜாஜி நகர் - அண்ணல் டாக்டர் அம்பேத்கர் திருமண மாளிகை :

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இராஜாஜி நகர், கஜபதி தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் உறுப்பினர்கள் என்.ஆர்.இளங்கோ, எம்.எம்.அப்துல்லா, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூபாய் 4.44 கோடி மதிப்பீட்டில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் திருமண மாளிகை கட்டப்பட்டுள்ளது. இந்த திருமண மாளிகையானது தரைத் தளம், முதல் தளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்றாம் தளத்துடன் 3,264 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடமாகும். இந்த திருமண மண்டபத்தின் தரைத் தளத்தில் வாகன நிறுத்தம், முதல் தளத்தில் சமையலறை மற்றும் உணவு அருந்தும் கூடம், இரண்டாம் தளத்தில் திருமண மண்டபம், மூன்றாம் தளத்தில்  மணமகன், மணமகள் தங்கும் அறைகள், குளியலறை, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் ரூ.16 கோடியில்.. உள்விளையாட்டரங்கம் முதல் திருமண மண்டபம் வரை.. திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!

=> சிங்கண்ண தெரு - முத்தமிழறிஞர் கலைஞர் திருமண மண்டபம் :

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை, சிங்கண்ண தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பி.வில்சன் அவர்களின் மேம்பாட்டு நிதி, சிங்கார சென்னை 2.0 மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூபாய் 10.59 கோடி மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த திருமண மண்டபம் 19,610 சதுர அடி பரப்பளவில் தரைத் தளம், முதல் தளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்றாம் தளங்களை கொண்டது. இந்த திருமண மண்டபத்தின் தரைத் தளத்தில் வாகனம் நிறத்துமிடம், முதல் தளத்தில் 150 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் கூடம், இரண்டாம் தளத்தில் 350 நபர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் திருமண மண்டபம், மூன்றாம் தளத்தில் 4 விருந்தினர் அறைகள், திருமண மண்டபத்திற்கு குளிருட்டும் வசதி, மின் தூக்கி மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் ரூ.16 கோடியில்.. உள்விளையாட்டரங்கம் முதல் திருமண மண்டபம் வரை.. திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!

=> ஆதிகேசவலு தெரு - சென்னை நடுநிலைப் பள்ளியில் புதிய பள்ளிக் கட்டடம் :

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, ஆதிகேசவலு தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் 3.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்படவுள்ளது. இந்த புதிய பள்ளிக் கட்டடமானது தரைத் தளம் மற்றும் முதல் தளத்துடன் 874.34 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்தப் பள்ளிக் கட்டத்தின் தரைத் தளத்தில் 3 வகுப்பறைகள், தலைமையாசிரியர் அறை, 2 சமையல் அறைகள், 2 வைப்பு அறைகள், கழிவறைகள், முதல் தளத்தில் 6 எண்ணிக்கையிலான வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (24.2.2026) சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி பேகம் 5-வது தெருவில் 1.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து விளையாட்டு உள்ளரங்க மைதானத்தை திறந்து வைத்தார்.

மொத்தம் ரூ.16 கோடியில்.. உள்விளையாட்டரங்கம் முதல் திருமண மண்டபம் வரை.. திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!

மேலும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி இராஜாஜி நகரில் 4.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அண்ணல் டாக்டர் அம்பேத்கர் திருமண மாளிகை மற்றும் சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ண தெருவில் 10.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருமண மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  திருவல்லிக்கேணி சிவராஜபுரத்தைச் சேர்ந்த உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்ட ப.சண்முகம் அவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வலது கால் அகற்றப்பட்ட நிலையில், அவருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று அதிநவீன எடைகுறைவான செயற்கை காலை பொருத்தினார்.

தொடர்ந்து, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவலு தெருவில் 3.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சென்னை நடுநிலைப்பள்ளியின் புதிய கட்ட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

banner

Related Stories

Related Stories