தமிழ்நாடு

திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!

திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகிக்கு அடி உதை கொடுத்து போலீசில் பொதுமக்களே ஒப்படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வேறு குற்றச்சம்பவங்களை விஜய் கட்சியினரே தைரியமாக செய்து வருகிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கஞ்சா போதை விற்பனை, கொள்ளை, கொலை என பல்வேறு குற்றச்சம்பவங்களில் தவெக-வினரே ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை காவல்துறையும் கண்டும் காணாததுமாய் இருந்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாவலாய் இருப்பதாக விஜய் வாய் கிழிய பேசி வரும் நிலையில், தன்னை மயக்க நிலையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட தவெக-வை சேர்ந்த பெண் புகார் கொடுக்க, அதற்கு ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ. சரவணன், அந்த பெண்ணை மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண்ணே புகார் கொடுத்துள்ளார்.

திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!

தற்போது வரை கட்சியோ, விஜயோ அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதோடு தவெக-வினர் பலரும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளில் குற்றவாளிகளாக இருக்கும் நிலையில், தன்னை தலைமை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், குதிரை பேரத்திலும், திமுக மீது அவதூறு பரப்புவதிலும் மட்டுமே அதீத ஆர்வத்துடன் இருந்து வருகிறது.

இந்த சூழலில் திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகியை, தற்போது மக்களே அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றிய செயலாளர் ரமேஷ் என்பவர், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தவெக நிர்வாகி, நேற்று அந்த பெண்ணை கடத்த முயன்றுள்ளார்.

திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், அந்த பெண்ணை மீட்டதோடு, தவெக ஒன்றிய செயலாளர் ரமேஷுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். தொடர்ந்து அவரை காவல் நிலையத்திலும் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.

தவெக ஆட்சியில் பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கும் நிலையில், அதனை கண்டும் காணாததுமாய் இருக்கும் விஜய், குதிரை பேரம் நடத்துவதிலும், ரீல்ஸ் எடுப்பதிலும், திமுகவை குறித்து அவதூறு பரப்புவதிலும் மட்டுமே ஆர்வம் கொண்டுள்ளதற்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories