தமிழ்நாடு

த.வெ.க அரசு என்ன டாஷ் பண்ணிட்டு... : பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரம் - DMK IT WING கண்டனம்!

பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரத்திற்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம் தெரிவித்துள்ளது.

த.வெ.க அரசு என்ன டாஷ் பண்ணிட்டு... : பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரம் - DMK IT WING கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி தொடர்பாக பழனி சார்பதிவாளர் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த நில மோசடி விவகாரத்திற்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”தொட மாட்டேன் தொடவும் விட மாட்டேன், அப்படின்னு மேடைக்கு மேடை சும்மா வீர வசனம் பேசுறீங்களே விஜய் அங்கிள் ஆமா, நீங்க என்ன டாஷ் புடுங்கினீங்கன்னு உங்க நடவடிக்கையிலேயே தெரியுது.

100 கோடி ரூபாய்க்கும் மேல மதிப்புள்ள கோவில் சொத்தை, வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடா பத்திரம் பதிவு பண்ணி கொள்ளையடிச்சிருக்காங்க. இது ஏதோ சாதாரணமா நடந்த விஷயம் கிடையாது. பக்காவா ஸ்கெட்ச் போட்டு பண்ணியிருக்காங்க

ஒரு கோவில் நிலத்தை பத்திரம் பதியணும்ன்றதுக்காகவே, ஒரு குறிப்பிட்ட அதிகாரிக்கு அந்த இடத்துக்கு அவசர அவசரமா டிரான்ஸ்பர் போடுறாங்க. மத்த அதிகாரிகளை எல்லாம் அன்னைக்குன்னு பார்த்து லீவு எடுக்க வைக்கிறாங்க. சரி, பத்திரம் பதிஞ்சு முடிஞ்சஅடுத்த நாளே அந்த பதிவாளரை அங்கிருந்து வேற இடத்துக்கு மாத்துறாங்க இதெல்லாம் தற்செயலா நடக்குற விஷயமா? இது அப்பட்டமான, திட்டமிட்ட பகல் கொள்ளை.

முதலமைச்சர் அவர்களே, இதுக்கு நீங்க எடுத்த நடவடிக்கை என்ன? உங்க கண் முன்னாடி இவ்வளவு பெரிய கொள்ளை நடக்கும்போது நீங்க என்ன டாஷ் பண்ணிட்டு இருக்கீங்க?

அமைச்சர் ரமேஷ் அவர்களே, மறுஆய்வுக் கூட்டம் நடத்தி சும்மா சீன் போடுறீங்களே100 கோடி சொத்து உங்க கண் முன்னாடியே கொள்ளை போறதுக்கு நீங்கதான் துணை போயிருக்கீங்கன்னு உங்க நடவடிக்கையே காட்டுது. மக்கள் சொத்தையும், மக்கள் பணத்தையும் காப்பாத்த துப்பில்லாத உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி? யோக்கியதை இருந்தா உடனே உங்க பதவியை ராஜினாமா பண்ணிட்டு வெளிய போங்க.” என கடுமையான கேள்விகளை எழுப்பி விமர்சித்துள்ளது.

banner

Related Stories

Related Stories