விளையாட்டு

வலிமையான பாகிஸ்தான் அணியை வீழ்த்திய நியூஸிலாந்து B அணி - அம்பலமான பாக். அணியின் பலவீனம் !

இரண்டாம் கட்ட வீரர்கள் கொண்ட நியூஸிலாந்து அணி வலிமையான பாகிஸ்தான் அணி தோற்கடித்துள்ளது.

வலிமையான பாகிஸ்தான் அணியை வீழ்த்திய நியூஸிலாந்து B அணி - அம்பலமான பாக். அணியின் பலவீனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து. இதனால் அந்த அணி அரையிறுதிக்கு செல்லாமல் லீக் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறியது.இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமே காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதன் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்தார். பின்னர் அவர் இடத்தில் டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத், டி20 கேப்டனாக ஷாகின் அப்ரிடி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக ஷாகின் அப்ரிடி மோசமாக செயல்பட்டார். அந்த தொடரை பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் இழந்தது.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டன்ஷிப் பதவியிலிருந்து ஷாஹீன் அப்ரிடி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பாபர் அசாம் மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20- தொடரில் பங்கேற்றது.

வலிமையான பாகிஸ்தான் அணியை வீழ்த்திய நியூஸிலாந்து B அணி - அம்பலமான பாக். அணியின் பலவீனம் !

நியூஸிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆடி வரும் நிலையில், இரண்டாம் கட்ட வீரர்கள் கொண்ட நியூஸிலாந்து அணி வலிமையான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆனால், மூன்றாவது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. இரண்டாம் கட்ட வீரர்கள் கொண்ட நியூஸிலாந்து அணி வலிமையான பாகிஸ்தான் அணி தோற்கடித்துள்ளதால் பாகிஸ்தான் வீரர்களின் பலவீனம் அம்பலமாகியுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories