விளையாட்டு

வெளிநாட்டு வீரர்களை புரிந்து கொள்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது - IPL அனுபவம் குறித்து தோனி கருத்து !

முதல் முறை சென்னை அணிக்கு கேப்டனான போது, வெளிநாட்டு வீரர்களை புரிந்து கொண்டு கேப்டனாக செயல்பட்டது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக தோனி கூறியுள்ளார்.

வெளிநாட்டு வீரர்களை புரிந்து கொள்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது - IPL அனுபவம் குறித்து தோனி கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.

அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். மேலும், கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் முதல்முறை தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை கேப்டனாக இருக்கும் ஒரே வீரராகவும் திகழ்ந்து வருகிறார். இவரது கேப்டன்சியின் கீழ் சென்னை அணி ஐபிஎல் வரலாற்றிலேயே வெற்றிகரமான அணியாக திகழ்ந்து வருகிறது.

வெளிநாட்டு வீரர்களை புரிந்து கொள்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது - IPL அனுபவம் குறித்து தோனி கருத்து !

இந்த நிலையில், முதல் முறை சென்னை அணிக்கு கேப்டனான போது, வெளிநாட்டு வீரர்களை புரிந்து கொண்டு கேப்டனாக செயல்பட்டது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக தோனி கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், ""ஐபிஎல் துவக்கப்பட்ட 2008 சீசனில் சென்னை மேத்யூ ஹைடன், மைக் ஹசி, முத்தையா முரளிதரன், மஹாயா நிடினி, ஜேக்கப் ஓரம் போன்ற அனுபவம் மிகுந்த வீரர்கள் இடம்பெற்றிருந்தார்கள்.

அந்த அனைவரையும் ஒரே அணியில் வைத்திருந்து அவர்களை புரிந்து கொண்டு செயல்பட்டது மிகப்பெரிய சவாலாக இருந்தது. பொதுவாக நீங்கள் அணியை வழி நடத்தும் போது அதில் உள்ள ஒவ்வொரு வீரர்களையும் புரிந்து கொள்வது அவசியம் என்று நான் நம்புவேன். வெளிநாட்டு வீரர்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கு ஐபிஎல் எனக்கு வாய்ப்பு கொடுத்தது. பொதுவாக சர்வதேச கிரிக்கெட்டில் நான் எதிரணி வீரர்களிடம் அதிகம் பேச மாட்டேன். ஆனால் வெளிநாட்டு வீரர்கள் கிரிக்கெட்டைப் பற்றி என்ன நினைப்பார்கள், அவர்களுடைய கலாச்சாரம் என்ன என்பது போன்றவற்றை ஐபிஎல் தொடரால் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories