விளையாட்டு

INDvsENG : 5-வது டெஸ்ட் போட்டிக்கு வானிலையில் ஏற்படப்போகும் பாதிப்பு : இந்தியாவில் இப்படி ஒரு நிலையா ?

தரம்சாலாவில் தற்போது இரவு நேரத்தில் -4 டிகிரி என்றளவில் நிலவும் வெப்பம் பகல் நேரத்தில் 1 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் கூறியுள்ளன.

INDvsENG : 5-வது டெஸ்ட் போட்டிக்கு வானிலையில் ஏற்படப்போகும் பாதிப்பு : இந்தியாவில் இப்படி ஒரு நிலையா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், அடுத்த போட்டியில் இந்தியா வென்று தொடரை 1-1 என சமன் செய்தது.

தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து ராஞ்சியில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அதைத் தொடர்ந்து நாளை மறுநாள் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் 5-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த போட்டி பனிமழையால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

INDvsENG : 5-வது டெஸ்ட் போட்டிக்கு வானிலையில் ஏற்படப்போகும் பாதிப்பு : இந்தியாவில் இப்படி ஒரு நிலையா ?

இமயமலையின் அடிவாரத்தில் உள்ள தரம்சாலாவில் தற்போது இரவு நேரத்தில் -4 டிகிரி என்றளவில் நிலவும் வெப்பம் பகல் நேரத்தில் 1 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் கூறியுள்ளன. அதனால் இந்தப் போட்டியின் முதல் 2 நாட்கள் அவ்வப்போது பனிமழையால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும், பனியோடு மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரம் போட்டி நடைபெறும் இறுதி மூன்று நாட்கள் வெயில் அடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பொதுவாக பனி தாக்கம் அதிகம் இருக்கும் காலங்களில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கும், ஸ்விங் பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும் என்பதால், இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கே வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories