விளையாட்டு

"டெஸ்ட் தொடரில் இந்திய அணி மீண்டும் தோல்வியை சந்திக்கும்" - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து !

இந்திய அணி இத்தொடரில் மீண்டும் தோல்வியை சந்திக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலிஸ்டர் குக் கூறியுள்ளார்.

"டெஸ்ட் தொடரில் இந்திய அணி மீண்டும் தோல்வியை சந்திக்கும்" - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியில் ரஜத் படிதார் அறிமுகமானார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில், 396 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.பின்னர் 399 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இங்கிலாந்து அணி 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

"டெஸ்ட் தொடரில் இந்திய அணி மீண்டும் தோல்வியை சந்திக்கும்" - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து !

இந்த நிலையில், இந்திய அணி இத்தொடரில் மீண்டும் தோல்வியை சந்திக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலிஸ்டர் குக் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " இத தொடரில் தனது முதல் வெற்றியை பெற்றதே இந்தியாவுக்கு பெரியநிம்மதியை கொடுத்திருக்கும். முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த அவர்கள் கடுமையான அழுத்தத்தில் இருந்திருப்பர்.

30 முதல் 70 ரன்கள் வரை அடிப்பது டெஸ்ட் போட்டியில் வெற்றியை கொடுக்காது. வீரர்கள் சதமடித்து அணியை வெற்றிபெற வைக்கவேண்டும். இங்கிலாந்து வீரர்கள் ற்றி பெறும் அளவுக்கு பெரிய இன்னிங்ஸ் விளையாடாததே தோல்விக்கு காரணம். இதனை வீரர்கள் சரி செய்யவேண்டும். இந்த போட்டியில் இங்கிலாந்து எடுத்து செல்வதற்கு பாடங்கள் இருந்தது. அதை பயன்படுத்தி இங்கிலாந்து விளையாடும் என்பதால் இந்த இந்திய அணி இத்தொடரில் மீண்டும் தோல்வியை சந்திக்கும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories