விளையாட்டு

"மெக்குல்லம், ஸ்டோக்ஸ் பைத்தியமாகிவிட்டார்கள், bazball தோல்வியடைந்த யுக்தி"- முன்னாள் கேப்டன் விமர்சனம் !

பயிற்சியாளர் மெக்குல்லம், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அதிரடியாக ஆடுகிறேன் என்ற யுத்தியில் பைத்தியம் ஆகிவிட்டார்கள் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜெப்ரி பாய்காட் கூறியுள்ளார்.

"மெக்குல்லம், ஸ்டோக்ஸ் பைத்தியமாகிவிட்டார்கள், bazball தோல்வியடைந்த யுக்தி"- முன்னாள் கேப்டன் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக ப்ரென்டன் மெக்கலமும், அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸும் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர் இயான் மார்கன் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகப்படுத்தி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த அட்டாக்கிங் கேமை டெஸ்ட்டிலும் அறிமுகப்படுத்தினர்.

இவர்களின் இந்த புதிய பரிமாணம் bazball என அழைக்கப்பட்டது. இந்த முறையில் நியூஸிலாந்து, இந்தியா போன்ற அணிகளை சொந்த மண்ணில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து கடைசியாக நடைபெற்று முடிந்த பழமையானதும், மதிப்புமிக்கதுமான ஆஷஸ் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலிய அணி 2-0 என்று முன்னிலையில் இருந்தபோது, bazball முறையில் அதிரடியாக ஆடி அந்த தொடரை 2-2 என்று சமநிலைக்கு கொண்டுவந்தது.

பின்னர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் bazball முறையில் ஆடி இங்கிலாந்து அணி வென்றது. இதனால் அடுத்து வரும் இந்திய தொடரிலும் bazball முறை தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி bazball முறையில் ஆடி தேவையின்றி விக்கெட்டுகளை இழந்து அந்த போட்டியில் தோல்வியைத் தழுவியது.

"மெக்குல்லம், ஸ்டோக்ஸ் பைத்தியமாகிவிட்டார்கள், bazball தோல்வியடைந்த யுக்தி"- முன்னாள் கேப்டன் விமர்சனம் !

இந்த நிலையில், பயிற்சியாளர் மெக்குல்லம், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அதிரடியாக ஆடுகிறேன் என்ற யுத்தியில் பைத்தியம் ஆகிவிட்டார்கள் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜெப்ரி பாய்காட் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் ரன்கள் தான் முக்கியமே தவிர எப்படி விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. ஒரு நல்ல பவுலரை எதிர்கொள்ளும்போது அவருடைய பந்தை அடித்து ஆடுகிறேன் என்ற பெயரில் எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும். நேர்மறையான எண்ணத்துடன், கொஞ்சம் அறிவையும் பயன்படுத்தி ஏன் உங்களால் விளையாட முடியாது.

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்குல்லம், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அதிரடியாக ஆடுகிறேன் என்ற யுத்தியில் பைத்தியம் ஆகிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. எப்போதுமே அடித்து ஆட வேண்டும் என்ற பித்து அவர்களுக்கு பிடித்து விட்டது. இந்த போட்டியில் இங்கிலாந்து ஆட்டத்தை இந்தியாவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்கள். பேஸ் பால் ஒரு தோல்வியான யுக்தி.ஆசஸ் தொடரில் இங்கிலாந்து அணி இதேபோன்ற ஒரு தவறை தான் செய்தது. வெற்றி பெறும் போட்டியில் அதிரடியாக ஆடி போட்டியை விட்டுக் கொடுத்தது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories