விளையாட்டு

"திறமை இருந்தும் மோசமாக ஆடும் அணி என்றால் அது இந்தியாதான்" - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் விமர்சனம் !

இந்திய அணி மோசமாக டெஸ்ட் போட்டிகளை ஆடும் அணியாக இருக்கிறது என முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் வான் கிண்டல் செய்துள்ளார்.

"திறமை இருந்தும் மோசமாக ஆடும் அணி என்றால் அது இந்தியாதான்" - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகக்கோப்பைத் தொடரின் தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்சூரியன் நகரில் நடைபெற்றது. இதில் மோசமாக ஆடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. விராட் கோலி, கே.எல்.ராகுல், பும்ரா மட்டுமே அணிக்கு பங்களிப்பு அளித்தனர்.

எனினும் மூன்றே நாளில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததை பல்வேறு முன்னாள் வீரர்களும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணி திறமைகள் இருந்தும் திறமைகளுக்குக் குறைவாக, மோசமாக டெஸ்ட் போட்டிகளை ஆடும் அணியாக இருக்கிறது என முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் வான் கிண்டல் செய்துள்ளார்.

"திறமை இருந்தும் மோசமாக ஆடும் அணி என்றால் அது இந்தியாதான்" - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் விமர்சனம் !

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின்போது வர்ணனையில் இருந்த மைக்கேல் வான், மார்க் வாஹ் ஆகியோர் இந்திய அணியின் தோல்வி குறித்து விவாதித்தனர். அப்போது பேசிய மைக்கேல் வான், "சமீப காலங்களில் இந்திய அணி அதிக வெற்றிகளைப் பெறவில்லை. அணியில் அதீத திறமை இருக்கிறது, ஆனால், திறமைக்குக் குறைவாக ஆடும் அணியாக உள்ளனர்.

இந்திய அணியில் ஏராளமான திறமைகள், வள ஆதாரங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு அவர்கள் நிறைய வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் இருமுறை டெஸ்ட் தொடரை வென்றனர். அது அபாரம். இந்திய அணியிடம் என்ன இல்லை, திறமைக்குக் குறைவா, அல்லது வள ஆதாரங்களுக்குத்தான் குறைவா?" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories