விளையாட்டு

பாகிஸ்தானில் நடைபெறும் டேவிஸ் டென்னிஸ் தொடர் : பங்கேற்குமா இந்திய அணி ? தொடரும் அரசியல் சர்ச்சை !

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாகிஸ்தானில் நடைபெறும் டேவிஸ் டென்னிஸ் தொடர் : பங்கேற்குமா இந்திய அணி ? தொடரும் அரசியல் சர்ச்சை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் மும்பையில் தாக்குதல் நடத்தின. அதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

கிரிக்கெட்டில் அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது. அதே நேரம் மற்ற விளையாட்டு அணிகளையும் பாகிஸ்தான் அனுப்ப இந்திய அரசு மறுத்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் 'வேர்ல்டு குரூப் 1' பிளே ஆப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த தொடர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெறும் டேவிஸ் டென்னிஸ் தொடர் : பங்கேற்குமா இந்திய அணி ? தொடரும் அரசியல் சர்ச்சை !

ஆனால், இந்த தொடரில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தொடரில் வெற்றிபெற்றால் மட்டுமே டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இந்தியா நீடிக்கமுடியும் என்பதால் இந்த தொடரில் இந்தியா பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை பாகிஸ்தான் செல்ல இந்திய டென்னிஸ் அணிக்கு இந்திய அரசு அனுமதி அளிக்காத நிலையில், எப்போது அனுமதி கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த முறை பாதுகாப்பு காரணங்களை காட்டி பாகிஸ்தான் நாட்டில் நடைபெறவிருந்த இந்த தொடர் கஜகஸ்தானுக்கு மாற்றப்பட்டது.

அதே போல இந்த முறையும் தொடர் நடைபெறு இடத்தை மாற்ற வேண்டும் என இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொடரை நடத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் இந்தியா பங்கேற்க மறுத்தால் பாகிஸ்தான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories