விளையாட்டு

பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், உனத்கட் : ஐபிஎல் தொடரில் அணிகள் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு விவரம் !

பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், உனத்கட் : ஐபிஎல் தொடரில் அணிகள் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு விவரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ள நிலையில், விரைவில் அதற்கான ஏலம் நடைபெறவுள்ளது. முன்னதாக ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டு வருகின்றன.

பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், உனத்கட் : ஐபிஎல் தொடரில் அணிகள் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு விவரம் !

ஐபிஎல் அணிகள் விடுவித்தவீரர்கள் பட்டியல் “

சி.எஸ்.கே. அணியிலிருந்து 8 வீரர்கள் விடுவிப்பு...

தக்கவைத்துள்ள வீரர்கள்: தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, ஷாக்யா ரஹானே, மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்‌ஷனா.

விடுவித்துள்ள வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சேனாபதி, ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகாலா.

2. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து 9 வீரர்கள் விடுவிப்பு...

தக்கவைத்துள்ள வீரர்கள்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஹெட்மெயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரல், ரியான் பராக், ஃபெரீரா, குணால் ரத்தோர், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா, டிரென்ட் போல்ட், ஆடம் ஸாம்பா, சஹல்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வசிஷ்ட், ஓபேட் மெக்காய், முருகன் அஸ்வின், கே.சி கரியப்பா, கே.எம்.ஆசிப்.

3. பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து ஐந்து வீரர்கள் விடுவிப்பு..

தக்கவைத்த வீரர்கள்: ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சிக்கந்தர் ராசா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா தைடே, அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், சாம் கரன், ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர் , ஹர்பிரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, சிவம் சிங்.

விடுவித்துள்ள வீரர்கள்: மோஹித் ரதீ, ராஜ் பாவா, ஷாருக் கான், பனுகா ராஜபக்சே, பால்தேஜ் சிங்.

பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், உனத்கட் : ஐபிஎல் தொடரில் அணிகள் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு விவரம் !

4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து 12 வீரர்கள் விடுவிப்பு...

தக்கவைத்துள்ள வீரர்கள்: ஸ்ரேயஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜேசன் ராய், சுனில் நரைன், சுயாஷ் ஷர்மா, அன்குல் ராய், ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.

விடுவித்துள்ள வீரர்கள்: ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், ஆர்யா தேசாய், டேவிட், ஷர்துல் தாக்கூர், நாராயண் ஜெகதீசன், மந்தீப் சிங், உமேஷ் யாதவ், டிம் சவுதி, ஜான்சன் சார்லஸ், பெர்குசன்.

5. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து ஐந்து வீரர்கள் விடுவிப்பு...

தக்கவைத்துள்ள வீரர்கள்: மார்க்ரம் (கேப்டன்), அப்துல் சமாத், அபிஷேக் சர்மா, மார்க்கோ யான்சன், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், சன்வீர் சிங், கிளாசன், புவனேஷ்வர் குமார், மயங்க் அகர்வால், நடராஜன், அன்மோல்ப்ரீத் சிங், மயங்க் மார்க்கண்டே, உம்ரான் மாலிக், நிதிஷ் குமார் ரெட்டி, ஃபசல்ஹக் பாரூக்கி.

விடுவித்துள்ள வீரர்கள்: ஹாரி ப்ரூக், சாமர்த் வியாஸ், கார்த்திக் தியாகி, விவ்ராந்த் சர்மா, அகில் ஹுசைன், அடில் ரஷித்.

6. லக்னா சூப்பர் ஜெயிண்ட் அணியில் இருந்து எட்டு வீரர்கள் விடுவிப்பு...

தக்கவைத்துள்ள வீரர்கள்: கே.எல்.ராகுல் (கேப்டன்), டிகாக், நிக்கோலஸ் பூரன், ஆயூஷ் பதோனி, கைல் மேயர்ஸ், ஸ்டாய்னிஸ், தீபக் ஹூடா, படிக்கல் (டிரேடட்), ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், க்ருணல் பாண்ட்யா, யுத்வீர் சிங், பிரேராக் மன்கட், யாஷ் தாக்கூர், அமித் மிஸ்ரா, மார்க் வுட், மயங்க் யாதவ், மோஷின் கான்.

விடுவித்துள்ள வீரர்கள்: உனத்கட், மனன் வோஹ்ரா, ஸ்வப்னில் சிங், டேனியல் சாம்ஸ், கரண் சர்மா, அர்பித் குலேரியா, சுர்யான்ஷ் ஷெட்ஜ், கருண் நாயர்.

7. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து 11 பேர் விடுவிப்பு...

தக்கவைத்துள்ள வீரர்கள்: டுப்ளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கரண் சர்மா, மனோஜ் பந்தேஜ், வைஷாக் விஜய்குமார், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ஹிமான்ஸ் டோப்லி, சர்மா, ராஜன் குமார்.

விடுவித்துள்ள வீரர்கள்: வனிந்து ஹசரங்கா, ஹர்சல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வெய்ன் பார்னல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல், கேதர் ஜாதவ்.

பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், உனத்கட் : ஐபிஎல் தொடரில் அணிகள் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு விவரம் !

8. மும்பை இந்தியன்ஸ் அணியில் 11 வீரர்கள் விடுவிப்பு..

தக்கவைத்துள்ள வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், கேமரூன் கிரீன், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

விடுவித்துள்ள வீரர்கள்: முகமது அர்ஷத் கான், ராமன்தீப் சிங், ஹிருத்திக் ஷோக்கீன், ராகவ் கோயல், ஜோஃப்ரா ஆர்ச்சர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் ஜான்சன், ஜே ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டான், சந்தீப் வாரியர்.

9. டெல்லி கேப்பிட்டல் அணியில் இருந்து 11 வீரர்கள் விடுவிப்பு...

தக்கவைத்துள்ள வீரர்கள்: ரிஷப் பந்த், பிரவின் துபே, டேவிட் வார்னர், விக்கி ஆஸ்வால், பிரித்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், லுங்கி இங்கிடி, லலித் யாதவ், கலீல் அகமது, மிட்செல் மார்ஷ், இஷாந்த் சர்மா, யாஷ் துல், முகேஷ் குமார்.

விடுவித்துள்ள வீரர்கள்: ரோசோவ், சேத்தன் சகாரியா, ரோவ்மேன் பவல், மணீஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோட்டி, ரிபால் பட்டேல், சர்பராஸ் கான், அமன் கான், பிரியம் கார்க்.

10. குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து எட்டு வீரர்கள் விடுவிப்பு...

தக்கவைத்துள்ள வீரர்கள்: ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ஷுப்மான் கில், மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், பி சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் தெவாட்டியா, முகமது ஷமி, நூர் அகமது, சாய் கிஷோர்,ரஷித் கான், ஜோசுவா லிட்டில், மோஹித் ஷர்மா.

விடுவித்துள்ள வீரர்கள்: யஷ் தயாள், கே.எஸ். பரத், ஷிவம் மாவி, படேல், பிரதீப் சங்வான், ஒடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப், தசுன் ஷனகா.

ஐ.பி.எல். 2024 ஏலத்திற்கான அணிகளின் கையிருப்பு தொகை...

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 40.75 கோடி

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - 34 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 32.7 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் - 31.4 கோடி

பஞ்சாப் கிங்ஸ் - 29.1 கோடி

டெல்லி கேப்பிடல்ஸ் - 28.95 கோடி

மும்பை இந்தியன்ஸ் - 15.25 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் - 14.5 கோடி

குஜராத் டைட்டன்ஸ் - 13.85 கோடி

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - 13.9 கோடி

banner

Related Stories

Related Stories