தமிழ்நாடு

“சட்டமன்றத்தில் முதலமைச்சர் இன்னும் Dance Fightதான் போடல” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!

சட்டமன்றத்தில் காவல்துறை மானியக்கோரிக்கையின் மீது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாத முதலமைச்சர் விஜயை எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

“சட்டமன்றத்தில் முதலமைச்சர் இன்னும் Dance Fightதான் போடல” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்.06 ஆம் தேதி நடைபெறுகிறது. நாளையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைவதால், அனைத்து கட்சிகளில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், தாராபுரம் தொகுதி தி.மு.க வேட்பாளர் எஸ்.சுன்யாவை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின் ”தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா படித்தவர், வழக்கறிஞர், சட்டமன்றத்தில் உங்களுக்காக வாதாடும் ஆற்றல் படைத்தவர். அவருக்கு வாக்களித்தால் அவர் கட்சி தாவ மாட்டார். ஆனால், பெட்டிபாமாவுக்கு வாக்களித்தால் அடுத்து வேறு கட்சிக்குத் தாவிவிடுவார்.

தவெக ஆட்சி அமைக்க, கட்சித் தலைவர்களுக்கு சோபாவும், எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டியும் கொடுத்துள்ளார் விஜய். அதனால்தான் சத்தியபாமாவை ‘பெட்டிபாமா’ என மக்கள் அழைக்கிறார்கள். தவெகவில் இணைத்து, மீண்டும் வேறு சின்னத்தில் போட்டியிடுகிறார் என்றால், தாராபுரம் மக்களை ஏமாளிகள் என நினைத்துவிட்டார் போல.

மேடை ஏறினாலே காட்டு கத்து கத்தும் முதலமைச்சர் விஜயைப் பார்க்கும்போது, ‘இவ்வளவு கத்தாதீங்க… பி.பி. வந்துரும்’ எனச் சொல்லும் அளவிற்கு விஜயின் பேச்சு இருக்கும். ஆனால், தாராபுரத்தில் மட்டும் கத்தவில்லை. அதற்குப் பதிலாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவருடன் சேர்ந்து வேட்பாளரும் நடிக்கிறார்.

சட்டப்பேரவையில் பாட்டு நிகழ்ச்சி தான் நடக்கிறது. முதலமைச்சர் விஜய்யோ இன்னும் டான்ஸும், சண்டைக் காட்சிகளும் மட்டும் தான் போடவில்லை. மற்றபடி அனைத்து நடிப்புக் காட்சிகளையும் வெளிப்படுத்திவிட்டார். ஆனால், சில நேரங்களில் அவையில் இருப்பது கூடத் தெரியாது. எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டார். சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் 18 கேள்விகளை எழுப்பினேன். முதலமைச்சர் இதுவரை பதில் அளிக்கவில்லை.

சட்டம் - ஒழுங்கு, மின்வெட்டு, அரிவாள் வெட்டு என தமிழ்நாடு சீர்கெட்டுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தில் 10 நாட்கள்கூட வேலை கொடுப்பதில்லை. அதுமட்டுமல்ல விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த த.வெ.க அரசுக்கு வக்கில்லை" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories