விளையாட்டு

பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவர் மீது வீரர்கள் அதிருப்தி ? வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க அனுமதி மறுப்பா ?

பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவரான வஹாப் ரியாஸ் மீது அந்த நாட்டு வீரர்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவர் மீது வீரர்கள் அதிருப்தி ? வெளிநாட்டு  தொடர்களில் பங்கேற்க அனுமதி மறுப்பா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி தனது இறுதி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணி அரையிறுதிக்கு செல்லாமல் லீக் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமே காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனிடையே தோல்விக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் இன்சமாம் உல் ஹக், பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு உறுப்பினர்கள் மொத்தமாக நீக்கப்பட்டதோடு, கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்தார்.பின்னர் பாகிஸ்தான் அணியின் இயக்குநராக முகமது ஹஃபீஸ் அறிவிக்கப்பட, டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத், டி20 கேப்டனாக ஷாகின் அப்ரிடி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். தேர்வுக்குழு தலைவராக வஹாப் ரியாஸ் நியமிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவர் மீது வீரர்கள் அதிருப்தி ? வெளிநாட்டு  தொடர்களில் பங்கேற்க அனுமதி மறுப்பா ?

இந்த நிலையில், தேர்வுக்குழு தலைவரான வஹாப் ரியாஸ் மீது அந்த நாட்டு வீரர்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் கலந்துகொள்ள தேர்வுக்குழு அனுமதி வழங்கவேண்டும். ஆனால், பாகிஸ்தான் அணிக்காக விளையாடும் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், இதனால் உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் விளையாட வேண்டும் என்றும் வஹாப் ரியாஸ் கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவ்வாறு அனுமதி வழங்காத காரணத்தால்தான் இமாத் வாசிம் ஓய்வு முடிவை அறிவித்ததாக பாகிஸ்தான் வாரிய உறுப்பினர்கள் சிலர் பொதுவெளியில் கருத்து தெரிவித்தனர். மேலும் , ஹாரிஸ் ரவூப், இமாம் உல் காக் ஆகியோருக்கும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories