விளையாட்டு

இன்று தொடங்குகிறது ICC உலகக்கோப்பை தொடர்.. 48 போட்டிகள்.. பரிசுத்தொகை எவ்வளவு ?

இன்று நடைபெறும் ICC உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன

இன்று தொடங்குகிறது ICC உலகக்கோப்பை தொடர்.. 48 போட்டிகள்.. பரிசுத்தொகை எவ்வளவு ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

அதேபோல் இறுதிப்போட்டியும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது. அதோடு முக்கியமாக இந்தியா-பாகிஸ்தான் மோதலும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா ஆடும் முதல் போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரும் 8-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்று தொடங்குகிறது ICC உலகக்கோப்பை தொடர்.. 48 போட்டிகள்.. பரிசுத்தொகை எவ்வளவு ?

கடந்த முறை இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடர் போலவே இந்த தொடரிலும் 10 அணிகள் கலந்துகொள்கின்றன. மொத்தம் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு மற்ற 9 அணிகளை எதிர்த்து ஒருமுறை விளையாடும். இதில் அதிக புள்ளிகள் பெரும் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் வகையில் அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மொத்த பரிசுத் தொகையாக ரூ. 83.10 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு கோப்பையுடன், பரிசாக ரூ.33.24 கோடி ரூபாயும், இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு 16.61 கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. அதே போல அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறும் இரு அணிகளுக்கும் தலா ரூ.6.65 கோடி வழங்கப்படும்

banner

Related Stories

Related Stories