விளையாட்டு

Asian Games : தொழில்நுட்ப கோளாறு.. பறிபோகவிருந்த பதக்க வாய்ப்பு.. நீரஜ் சோப்ராவுக்கு நடந்தது என்ன ?

ஆசிய விளையாட்டு போட்டியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீரஜ் சோப்ரா பதக்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோகவிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Asian Games : தொழில்நுட்ப கோளாறு.. பறிபோகவிருந்த பதக்க வாய்ப்பு.. நீரஜ் சோப்ராவுக்கு நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்தது. அந்த வகையில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் நடைபெற்று வருகிறது.

கடந்த செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கிய சீனாவின் ஹாங்சோ நகரில் தொடங்கிய இந்த போட்டிகள் வரும் அக்டோபர் எட்டாம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 48 வகையான விளையாட்டுகளில் 481 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவில் இருந்து 38 விளையாட்டுகளில் மொத்தம் 634 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த தொடரில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு உறுதி எனக் கருதப்பட்ட ஈட்டி எறிதல் சுற்றில் இந்தியா தங்கம், மற்றும் வெள்ளி வென்று அசத்தியுள்ளது. இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்ல, மற்றொரு இந்திய வீரர் கிஷோர் ஜெனா வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

Asian Games : தொழில்நுட்ப கோளாறு.. பறிபோகவிருந்த பதக்க வாய்ப்பு.. நீரஜ் சோப்ராவுக்கு நடந்தது என்ன ?

ஆனால், இதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீரஜ் சோப்ரா பதக்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோகவிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதி சுற்றின் முதல் வாய்ப்பில் நீரஜ் சோப்ரா நீண்ட தூரம் ஈட்டி எறிந்தார். ஆனால், எறிந்த தூரம் நீண்ட நேரம் அறிவிக்கப்படாமல் இருந்தது. எப்படியும் 85 மீட்டருக்கு மேல் அவர் எறிந்திருப்பார் என கூறப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தூரம் கணக்கிடப்படவில்லை என்றும், எனவே மீண்டும் எரியுமாறும் நீரஜ்க்கு கூறப்பட்டது. ஆனால், அந்த வாய்ப்பில் நீரஜ் 82.38 மீட்டர் தூரமே எறிந்தார். பின்னர் இரண்டாவது வாய்ப்பில், 84.49 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.

அதே நேரம் மற்றொரு இந்திய வீரர் கிஷோர் ஜெனா 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருந்தார். எனினும் தனது இறுதி வாய்ப்பில் நீரஜ் சோப்ரா 88.88 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்த போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டும் இந்தியாவுக்கே கிடைத்தன. எனினும் இந்த தொடரில் நடுவரின் சில செயல்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories