விளையாட்டு

ஆசையோடு 2 நாள் பயணித்த பாகிஸ்தான் வீரர்.. நிர்வாகத்தில் தவறால் கிண்டலுக்குள்ளான சோகம்.. நடந்தது என்ன ?

பாகிஸ்தான் வீரர் ஷாநவாஸ் தஹானி பாகிஸ்தான் அணி நிர்வாகத்தால் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆசையோடு 2 நாள் பயணித்த பாகிஸ்தான் வீரர்.. நிர்வாகத்தில் தவறால் கிண்டலுக்குள்ளான சோகம்.. நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் ஆசியக்கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல குரூப் சுற்றில் பாகிஸ்தான் அணி நேபாள அணியை நொறுக்கி அபாரவெற்றிபெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டது. அந்த போட்டியில் மழை மட்டும் பெய்யாமல் இருந்தால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றிருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்த போட்டி முடிவு கிடைக்கவில்லை என்றாலும் குரூப் பிரிவில் முதல் இடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில், வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது. ஆனால், அடுத்து நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மோசமாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி 228 வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

பின்னர் நடைபெற்ற முக்கியமான போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், கடைசி பந்தில் வெற்றியை இழந்தது. இதன் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது. முன்னதாக இந்த தொடரின் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினர்.

ஆசையோடு 2 நாள் பயணித்த பாகிஸ்தான் வீரர்.. நிர்வாகத்தில் தவறால் கிண்டலுக்குள்ளான சோகம்.. நடந்தது என்ன ?

அந்த வகையில் பந்துவீச்சாளர் ஹரிஷ் ரவூப்க்கு பதிலாக விளையாடுவதற்கு ஷாநவாஸ் தஹானி என்பவர் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சனவாஸ் தஹானி பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கிளம்பியுள்ளார். ஆனால், பாகிஸ்தான் நிர்வாகம் அவருக்கான பயணதிட்டத்தை மோசமான முறையில் வடிவமைத்ததால், ஷாநவாஸ் தஹானி லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று, பின்னர் அங்கிருந்து துபாய்க்கு சென்று அடுத்த நாள் காலை துபாயிலிருந்து கொழும்புவிற்கு புறப்பட்டு சென்றார்.

ஆனால், அவர் கொழும்பு கொள்வதற்குள் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறி நாடு திரும்பும் நிலை ஏற்பட்டது. இதனால் இலங்கை சென்றும் பலன் இல்லாத நிலையில், தஹானியும் பாகிஸ்தானுக்கு திரும்பினார்.

இதில் சோகமான விஷயம் என்னவென்றால் விமானத்தில் பயணம் செய்ததால் தனது அணி தோல்வியைத் தழுவி நாடு திரும்புவதையே அறியாத தஹானி கொழும்புவில் தரையிறங்கியதும் அடுத்த சில நிமிடங்களில் இலங்கைக்கு வந்து விட்டதாக மகிழ்ச்சியுடன் தனது சமூகவலை பக்கத்தில் பதிவிட்டார். இந்த சம்பவத்தை வைத்து பாகிஸ்தான் அணி நிர்வாகத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories