விளையாட்டு

"இதுதான் இந்திய அணி, உங்களுக்கு பிடிக்கவில்லை என போட்டிகளை பார்க்கவேண்டாம்" - கவாஸ்கர் காட்டம் !

அணி தேர்வு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், போட்டிகளை பார்க்காதீர்கள் என முன்னாள் இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

"இதுதான் இந்திய அணி, உங்களுக்கு பிடிக்கவில்லை என போட்டிகளை பார்க்கவேண்டாம்" - கவாஸ்கர் காட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சில வாரங்களுக்கு முன்னர் ஆசிய கோப்பைக்கான அட்டவணை வெளியானது. அதில், ஒன்பது ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட உள்ள நிலையில், வெறும், நான்கு ஆட்டங்கள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது சர்சையானது.

அதனைத் தொடர்ந்து இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், திலக் வர்மாவிற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

அதே நேரம் அஸ்வின், சஹால், தவான் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இடம் வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு ரசிகர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், முக்கிய அஸ்வின், சஹாலை தேர்வு செய்யாததை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுதான் தற்போதைய இந்திய அணி. இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், போட்டிகளை பார்க்காதீர்கள் என முன்னாள் இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் காட்டத்துடன் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுவிட்டது. அதனால் இனி அஸ்வின் பற்றி பேசவேண்டாம். சர்ச்சைகள் உருவாக்குவதை நிறுத்துங்கள். இதுதான் தற்போது இந்திய அணி. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், போட்டிகளை பார்க்காதீர்கள்.

"இதுதான் இந்திய அணி, உங்களுக்கு பிடிக்கவில்லை என போட்டிகளை பார்க்கவேண்டாம்" - கவாஸ்கர் காட்டம் !

அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும், அவர் இடத்தில வேறு ஒருவர் இருக்க வேண்டும் என்று சொல்வதை நிறுத்துங்கள், இது தவறான எண்ணம்.நிச்சயமாக இந்த அணியால் உலகக் கோப்பையை வெல்ல முடியும். எந்த வீரரும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூற முடியாது. 17 பேர் கொண்ட ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு அனுபவம் வாய்ந்த மற்றும் ஃபார்மில் உள்ள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிய கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி சிறந்ததாகவே திகழ்கிறது. இந்த அணியில் இருந்துதான் உலகக் கோப்பைக்கான 15 பேர் தேர்வு இருக்க வேண்டும். இந்தியாவுக்காக விளையாடும்போது ஒவ்வொரு போட்டியும் முக்கியம். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற எப்போதும் பாடுபட வேண்டும்.ஆசிய கோப்பை பெரிய தொடர். ஆனால் உலக கோப்பையை வெல்வது முற்றிலும் வேறுபட்டது, அதை ஆசிய கோப்பை வெற்றியால் பிரதிபலிக்க முடியாது. இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றால், மிகவும் நல்லது. ஆனால் உலகக் கோப்பையை வெல்வதே இலக்காக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories