விளையாட்டு

உலகக்கோப்பை வென்ற வீராங்கனையின் உதட்டில் முத்தம்.. மன்னிப்பு கோரிய கால்பந்து சங்க தலைவர்.. நடந்தது என்ன ?

உலகக்கோப்பையை வென்ற வீராங்கனையின் உதட்டில் முத்தமிட்ட சம்பவத்துக்கு ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

உலகக்கோப்பை வென்ற வீராங்கனையின் உதட்டில் முத்தம்.. மன்னிப்பு கோரிய கால்பந்து சங்க தலைவர்.. நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

FIFA மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்றது. அதன் லீக் போட்டிகள் முடிவடைந்து நிலையில், ஜெர்மனி, கனடா, பிரேசில் போன்ற முக்கிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறின .

இந்த தொடரின் காலிறுதிக்கு ஸ்பெயின், நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், இங்கிலாந்து, கொலம்பியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய அணிகள் முன்னேறின. இதில் காலிறுதி போட்டியில் ஸ்பெயின் அணி நெதர்லாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறியது. அதே போல மற்றொரு போட்டியில், ஸ்வீடன் அணி ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

அதோடு போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியா பிரான்ஸ் அணியை 7-க்கு 6 என்ற கணக்கில் அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்து அணி, கொலம்பியா அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.தொடர்ந்து நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி ஸ்வீடன் அணியை எதிர்கொண்டது. இதில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதன்பின்னர் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

உலகக்கோப்பை வென்ற வீராங்கனையின் உதட்டில் முத்தம்.. மன்னிப்பு கோரிய கால்பந்து சங்க தலைவர்.. நடந்தது என்ன ?

பின்னர் நடைபெற்ற இறுதிப்போட்டியில், முதல் முறை உலகக்கோப்பை வெல்ல ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஸ்வீடன் அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி உலககோப்பை தொடரில் மூன்றாவது இடத்தை பிடித்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவின்போது ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியாலெஸ் சில ஸ்பெயின் வீராங்கனைகளை கட்டிப்பிடித்து பாராட்டினார். அப்போது அவர் ஜெனிபர் ஹெர்மோசா என்ற வீராங்கனையின் உதட்டில் முத்தமிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தன்னிடம் நடந்துகொண்டது பிடிக்கவில்லை என ஜெனிபர் ஹெர்மோசாச முகவலைதளத்தில் பதிவிட்டதைத தொடர்ந்து பலரும் அவருக்கு கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

உலகக்கோப்பை வென்ற வீராங்கனையின் உதட்டில் முத்தம்.. மன்னிப்பு கோரிய கால்பந்து சங்க தலைவர்.. நடந்தது என்ன ?

இந்த நிலையில், தனது செயலுக்கு ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியாலெஸ் பகிரங்கமாகி மன்னிப்பு கோரியுள்ளார். இந்த சம்பவம் பற்றி கூறிய அவர், " உலகக்கோப்பையை வென்ற உற்சாகத்தில் இவ்வாறு நடந்து கொண்டேனே தவிர, இதில் உள்நோக்கம் இல்லை. நான் செய்த செயல் முற்றிலும் தவறானது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்கு மன்னிப்பும் கேட்கிறேன். அந்த வீராங்கனையிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது எனக்கு ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories