விளையாட்டு

இந்திய அணிக்கு கேப்டனான CSK வீரர்... ஆசிய விளையாட்டு போட்டிக்கான இளம் இந்திய அணி அறிவிப்பு !

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய அணிக்கு கேப்டனான CSK வீரர்... ஆசிய விளையாட்டு போட்டிக்கான இளம் இந்திய அணி அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

இந்நிலையில் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தற்போது இதில் ஒரு சிக்கலும் எழுந்துள்ளது.

ஏனெனில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் வருகின்ற செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்திய அணி கலந்துகொண்டால் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பும் இந்திய அணிக்கு உள்ளது.

இந்திய அணிக்கு கேப்டனான CSK வீரர்... ஆசிய விளையாட்டு போட்டிக்கான இளம் இந்திய அணி அறிவிப்பு !

இதனால் இதில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் ,அந்த நாட்களில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால் அதில் இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் ஆடவர் அணியின் பங்கேற்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிசிசிஐ-யின் உயர்மட்ட குழு கூட்டத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதில் இரண்டாம் கட்ட இந்திய அணி அனுப்பப்படும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு இளம்வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கு கேப்டனான CSK வீரர்... ஆசிய விளையாட்டு போட்டிக்கான இளம் இந்திய அணி அறிவிப்பு !

அணி விவரம் : ருத்துராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான், அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், ஷிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங்.

மாற்று வீரர்களின் பட்டியலில் யாஷ் தாக்குர், சாய் கிஷோர், சாய் சுதர்சன், வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டுக்கான இந்திய பெண்கள் அணி விவரம் வருமாறு: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி, திதாஸ் சாது, ராஜேஸ்வரி கெய்க்வாட், மின்னுமணி, கனிகா அகுஜா, உமா ஷெட்டி, அனுஷா பரேட்டி.

banner

Related Stories

Related Stories