விளையாட்டு

முன்னாள் ஜாம்பவான் மேற்கிந்திய தீவுகள் அணியை சிதைத்து வென்ற இந்தியா.. பந்துவீச்சில் கலக்கிய அஸ்வின் !

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

முன்னாள் ஜாம்பவான் மேற்கிந்திய தீவுகள் அணியை சிதைத்து வென்ற இந்தியா.. பந்துவீச்சில் கலக்கிய அஸ்வின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் பங்கேற்க அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. இந்தியா தொடரில் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இளம்வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். ருத்துராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடம்வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அபாரமான பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

முன்னாள் ஜாம்பவான் மேற்கிந்திய தீவுகள் அணியை சிதைத்து வென்ற இந்தியா.. பந்துவீச்சில் கலக்கிய அஸ்வின் !

பின்னர் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் மற்றும் அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பான விளையாடினர். இதில் அனுபவ வீரர் போல தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.மேலும், கேப்டன் ரோகித்சர்மாவும் சதம் விளாசி அசத்தினர்.

இவர்களில் இந்த அபார ஆட்டம் காரணமாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 171 ரன்களும், ரோஹித் 103 ரன்களும், கோலி 76 ரன்களும் விளாசினர்.

பின்னர் தனது இரண்டாம் இன்னிங்க்ஸை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி அஸ்வினின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

banner

Related Stories

Related Stories