விளையாட்டு

IPL-ஐ போலவே அமெரிக்காவிலும் அசத்தும் CSK அணி.. கான்வே, மில்லரின் முரட்டு அடியால் அபார வெற்றி !

அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரின் முதல் வெற்றியை டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பதிவு செய்துள்ளது.

IPL-ஐ போலவே அமெரிக்காவிலும் அசத்தும் CSK அணி.. கான்வே, மில்லரின் முரட்டு அடியால் அபார வெற்றி  !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும், ஐபிஎல் பாணியிலான தொடரை ஆரம்பித்தது. 6 அணிகள் கொண்ட இந்த தொடரிலும் ஐபிஎல் அணிகள் களமிறங்கி 6 அணிகளையும் வாங்கின. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் ஐபிஎல் அணிகள் களமிறங்கியுள்ளன. அங்கு நடைபெறவுள்ள 'மேஜர் லீக் கிரிக்கெட் டி20' என்ற டி20 லீக் போட்டியில் 6 அணிகள் பங்குபெற்று விளையாடுகின்றன.

IPL-ஐ போலவே அமெரிக்காவிலும் அசத்தும் CSK அணி.. கான்வே, மில்லரின் முரட்டு அடியால் அபார வெற்றி  !

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியை வாங்கி அதற்கு டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (TSK) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு CSK அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனாக CSK அணியின் முன்னாள் வீரர் டுபிளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், CSK அணியின் வீரர்களான டெவான் கான்வே, மிட்சல் சாண்ட்னர் மற்றும் CSK அணியில் பயிற்சியாளராக இருக்கும் பிராவோ வீரராக அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும் டேவிட் மில்லரும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி லாஸ் ஏங்ஜெல்ஸ் க்நைட்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற லாஸ் ஏங்ஜெல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில், 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. அணியில் மில்லர் 61 ரன்களும், கான்வே 55 ரன்களும் விளாசினார். இறுதிக்கட்டத்தில் பிராவோ அதிரடியாக 16 ரன்கள் குவித்தார்.

பின்னர் ஆடிய லாஸ் ஏங்ஜெல்ஸ் அணி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்கமுடியாமல் 14 ஒவரிலேயே 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

banner

Related Stories

Related Stories