தமிழ்நாடு

எங்கள் ஆட்சியில் என் மீது புகார் கொடுத்தவன் யார்? : காவல் நிலையத்தில் ரகளை செய்த த.வெ.க நிர்வாகி!

த.வெ.க நிர்வாகி ஒருவர் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் ஆட்சியில் என் மீது புகார் கொடுத்தவன் யார்? : காவல் நிலையத்தில் ரகளை செய்த த.வெ.க நிர்வாகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா . இவர் நேற்று முன்தினம் இரவு கே.ஜி.கண்டிகையிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கிருஷ்ணாகுப்பம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும், அப்பகுதியின் தவெக நிர்வாகியுமான கார்த்திகேயன் என்பவர், குடிபோதையில் சத்யாவை வழிமறித்து ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதோடு நிற்காமல், சத்யாவைப் பின்தொடர்ந்து சென்று ஆர்.கே.பேட்டை பஜாரில் வைத்து அவரைத் தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சத்யா ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்துவதற்காக, உதவி காவல் ஆய்வாளர் சிங்காரவடிவேலு, கார்த்திகேயனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், நேற்று காலை தனது காரில் ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கும் கடுமையான போதையில் இருந்த அவர், போலீசாரின் கண் எதிரிலேயே, "எங்கள் ஆட்சியில் என் மீது புகார் கொடுத்தவன் யார்? என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது" என்று கூறி கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

காவல் நிலையத்திற்குள் புகுந்து அதிகாரிகளிடமே அத்துமீறி மிரட்டல் விடுத்த கார்த்திகேயனை போலீசார் உடனடியாக மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, சத்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தவெக நிர்வாகி கார்த்திகேயனை அதிரடியாகக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories