விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு சென்றே சம்பவம் செய்தார்கள், இங்கிலாந்தில் செய்யமாட்டார்களா ? - முன்னாள் வீரர் கருத்து !

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்இந்திய அணி வெல்ல வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சென்றே சம்பவம் செய்தார்கள், இங்கிலாந்தில் செய்யமாட்டார்களா ? - முன்னாள் வீரர் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் சாம்பியன் பட்டத்திற்காக முட்டி மோத போகின்றனர். கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்த இந்திய அணி இந்த முறையாவது அதனை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த முறை இந்திய அணி இங்கிலாந்து சென்றிருந்தபோது அங்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டிருந்தார். மேலும், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என அசத்தியிருந்தார். ஆனால் இந்த முறை இருவரும் காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சென்றே சம்பவம் செய்தார்கள், இங்கிலாந்தில் செய்யமாட்டார்களா ? - முன்னாள் வீரர் கருத்து !

இது தவிர சமீப காலமாக இந்திய அணியில் சிறந்த நடுகள வீரராக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயரும் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காயம் காரணமாக இந்திய அணி தடுமாறி வரும் என விமர்சனங்கள் எழுந்தன.

எனினும் அவர்களுக்கு மாற்றாக இளம் வீரர்கள் அணிவகுத்து நிலையில், தற்போது இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு இணையாக வலுவான அணியாகவே காட்சியளிக்கிறது. இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்இந்திய அணி வெல்ல வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சென்றே சம்பவம் செய்தார்கள், இங்கிலாந்தில் செய்யமாட்டார்களா ? - முன்னாள் வீரர் கருத்து !

இது குறித்து பேசிய அவர், " தற்போதைய இந்திய அணி எந்தவிதமான கள சூழலிலும் வெல்லும் என நான் நினைக்கிறேன். அதற்கு உதாரணமாக ஆஸ்திரேலியாவில் அவர்களது செயல்பாட்டை சொல்லலாம். கடந்த முறை நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி அந்த மைதானத்தின் சூழலை தவறாக கணித்து விட்டனர் என கருதுகிறேன்.

அதே நேரத்தில் ஓவலில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த முறை இங்கிலாந்தை இங்கு வீழ்த்தி உள்ளது. வானிலை ஒத்துழைத்தால் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3-வது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் என்ற ஃபார்முலாவில் களமிறங்கும் வாய்ப்பு அதிகம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories