விளையாட்டு

IPL தொடரில் பணம் கிடைக்கும்தான்,, ஆனால்.. - நாட்டுக்காக ஆடுவது குறித்து மிட்சல் ஸ்டார்க் கூறியது என்ன ?

ஐபிஎல் தொடரால் வரும் பணத்தை விட நாட்டுக்காக ஆடுவதையே முக்கிய நோக்கமாக கொண்டு ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க் இருந்து வருகிறார்.

IPL தொடரில் பணம் கிடைக்கும்தான்,, ஆனால்.. - நாட்டுக்காக ஆடுவது குறித்து மிட்சல் ஸ்டார்க் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

IPL தொடரில் பணம் கிடைக்கும்தான்,, ஆனால்.. - நாட்டுக்காக ஆடுவது குறித்து மிட்சல் ஸ்டார்க் கூறியது என்ன ?

இதனிடையே இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் அமெரிக்காவில் நடைபெறவுள்ள MLC டி20 தொடரில் ஐபிஎல் அணிக்கு சொந்தமான லாஸ் ஏஞ்சல்ஸ் அணியில் ஆடுவதற்காக இங்கிலாந்து தேசிய அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட்டில் ஐபிஎல் ஏற்படுத்திய மிகப்பெரும் தாக்கத்தின் விளைவாக கூறப்பட்டது.

மேலும் இதேபோல பல முன்னணி வீரர்களும் தேசிய அணிகளை விட ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த அணிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் என கூறப்பட்டது. ஆனால், ஒரு பக்கம் இப்படி நாட்டை விட ஐபிஎல் தொடரே முக்கியம் என சில வீரர்கள் இருக்க ஐபிஎல் தொடரால் வரும் பணத்தை விட நாட்டுக்காக ஆடுவதையே முக்கிய நோக்கமாக கொண்டு ஆஸ்திரேலிய வீரர் மிச்சேல் ஸ்டார்க் இருந்து வருகிறார்.

IPL தொடரில் பணம் கிடைக்கும்தான்,, ஆனால்.. - நாட்டுக்காக ஆடுவது குறித்து மிட்சல் ஸ்டார்க் கூறியது என்ன ?

இது தொடர்பாக பேசிய அவர், "ஐபிஎல் தொடரில் பணம் நிறைய கிடைக்கிறதுதான். ஆனால் ஆஸ்திரேலியா அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட விரும்புகிறேன். இதற்காக ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடுவதற்காக, சில விஷயங்களை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தேன். அதனாலதான் ஐபிஎல் போன்ற தொடரில் விளையாடாமல் இருக்கிறேன். 10 வருடத்துக்கு மேல் மூன்று பார்மட் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடுவது கடினம்தான். ஆனால் நான் இவ்வளவு தூரம் வந்ததற்காக அணிக்கு நான் நன்றி உள்ளவனாக இருக்க விருப்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories