விளையாட்டு

"தோனி இப்படி ஒரு வீரராக விளையாடுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்" -பிராவோவின் கருத்தை மறுத்த சேவாக் !

தோனி இம்பாக்ட் வீரராக விளையாட ஒருபோதும் விரும்பமாட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

"தோனி இப்படி ஒரு வீரராக விளையாடுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்" -பிராவோவின் கருத்தை மறுத்த சேவாக் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.

அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

"தோனி இப்படி ஒரு வீரராக விளையாடுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்" -பிராவோவின் கருத்தை மறுத்த சேவாக் !

இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். பெரும்பாலும் இந்த தொடர்தான் அவரின் இறுதி ஐபிஎல் தொடராக இருக்கும் என கருதப்படுவதால் சென்னை அணி விளையாடும் இடங்களில் எல்லாம் தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் குவிந்தனர்.

"தோனி இப்படி ஒரு வீரராக விளையாடுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்" -பிராவோவின் கருத்தை மறுத்த சேவாக் !

அதே நேரம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றிய பின்னர் தோனி உடல்நலம் ஒத்துழைத்தால் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுவேன் என்று கூறியிருந்தார்.இதற்கு முன்னதாக பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் பிராவோ, " இம்பாக்ட் பிளேயர் என்னும் விதிமுறையை பயன்படுத்தி எம்.எஸ்.தோனியை இன்னும் அதிக ஆண்டுகள் விளையாடுவார். அவரது கேப்டன்சி அணிக்கு முக்கியம்" என்று கூறியிருந்தார்.

ஆனால், இவரின் இந்த கருத்தை இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் மறுத்துள்ளார். இது தொடர்பான பேசிய அவர், "தோனியை பொறுத்தவரை அவர் இம்பாக்ட் பிளேயராக விளையாட மாட்டார். ஏனென்றால் இம்பாக்ட் பிளேயர் விதி என்பது பேட்டிங் மட்டும் ஆடலாம் அனால் பீல்டிங் செய்ய தேவை இல்லை அல்லது பௌலிங் செய்யலாம் ஆனால் பேட்டிங் செய்ய தேவை இல்லை என்போருக்குதான் உதவும். ஆனால், தோனி 20 ஓவர்கள் களத்தில் நிற்கவேண்டும் என்று நினைப்பவர். இதனால் அவர் இம்பாக்ட் பிளேயராக நிச்சயம் ஆடமாட்டார்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories