விளையாட்டு

PSG கிளப்பில் இருந்து விலகுகிறார் மெஸ்ஸி.. உறுதி செய்த பயிற்சியாளர்.. Messi-யின் அடுத்த கிளப் என்ன ?

இந்த சீசன் முடிந்ததும் மெஸ்ஸி PSG கிளப்பில் இருந்து விலகுவார் என்றும் PSG அணியில் பயிற்சியாளர் கிறிஸ்டோஃப் கால்டியர் கூறியுள்ளார்.

 PSG கிளப்பில் இருந்து விலகுகிறார் மெஸ்ஸி.. உறுதி செய்த பயிற்சியாளர்.. Messi-யின் அடுத்த கிளப் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த போட்டியில் ரொனால்டோ கண்ணீரோடு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 PSG கிளப்பில் இருந்து விலகுகிறார் மெஸ்ஸி.. உறுதி செய்த பயிற்சியாளர்.. Messi-யின் அடுத்த கிளப் என்ன ?

அதேபோல அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி ’பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்’ என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். PSG அணியுடனான மெஸ்ஸியின் ஒப்பந்தம் இந்தாண்டோடு முடிவடையும் நிலையில், அடுத்ததாக அவர் தொடர்ந்து PSG அணியில் தொடருவாரா அல்லது வேறு அணிக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் ரொனால்டோ ஆடும் சவுதி லீக்கின் அல் நாசர் அணியின் போட்டி கிளப்பான அல் ஹிலால் ரொனால்டோவை விட அதிக தொகைக்கு மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், மெஸ்ஸி நீண்ட நாள் ஆடிய பார்சிலோனா கால்பந்து கிளப் மீண்டும் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாகவும், அந்த அணியோடு மெஸ்ஸியின் மேலாளரும் தந்தையுமான ஜோர்ஜே பேசி வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த செய்திகளை பார்சிலோனா கால்பந்து கிளப்பின் தலைவர் ஜோன் லபோர்டா மறுத்துள்ளார்.

 PSG கிளப்பில் இருந்து விலகுகிறார் மெஸ்ஸி.. உறுதி செய்த பயிற்சியாளர்.. Messi-யின் அடுத்த கிளப் என்ன ?

இது தொடர்பாக பேசிய அவர், " நாங்கள் லியோனல் மெஸ்ஸியை மிகவும் நேசிக்கிறோம்.ஆனால் அவரை தற்போது எங்களது கழகத்திற்கு அழைத்து வரும் எந்த திட்டமும் எங்களிடம் இல்லை" என்று கூறியுள்ளார். இதன்மூலம் அடுத்த சீசனில் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் இணைவார் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அதே நேரம் மெஸ்ஸி தற்போது ஆடிவரும் PSG கிளப்பில் இருந்து விலகுவதில் உறுதியாக உள்ளார் என்றும், இதன் காரணமாக இந்த சீசன் முடிந்ததும் அவர் PSG கிளப்பில் இருந்து விலகுவார் என்றும் PSG அணியில் பயிற்சியாளர் கிறிஸ்டோஃப் கால்டியர் கூறியுள்ளார். இதன் காரணமாக மெஸ்ஸி அடுத்து எந்த கால்பந்து அணியில் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories