விளையாட்டு

10 ஆண்டுகள் காத்திருந்த பகை.. மீண்டும் களத்திலேயே மோதிக்கொண்ட கோலி -காம்பிர்.. ஆட்டத்தை மிஞ்சிய பரபரப்பு!

10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் களத்திலேயே கோலி மற்றும் காம்பிர் ஆக்ரோஷமாக மோதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகள் காத்திருந்த பகை.. மீண்டும் களத்திலேயே மோதிக்கொண்ட கோலி -காம்பிர்.. ஆட்டத்தை மிஞ்சிய பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. முன்னதாக பெங்களூருவில் இந்த அணிகள் மோதிய போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற்றிருந்தது.

அப்போது வென்ற மகிழ்ச்சியில் லக்னோ வீரர் ஆவேஷ் கான் ஹெல்மெட்டை எரிந்து வெற்றியை கொண்டாடியது மற்றும் லக்னோ பயிற்சியாளர் காம்பிர் ரசிகர்கள் அமைதியாக இருக்கும்படி செய்கை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்றது.

10 ஆண்டுகள் காத்திருந்த பகை.. மீண்டும் களத்திலேயே மோதிக்கொண்ட கோலி -காம்பிர்.. ஆட்டத்தை மிஞ்சிய பரபரப்பு!

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. லக்னோ மைதானம் சமீப சில போட்டிகளாக பேட்டிங் ஆட கடுமையாக இருந்துவந்த நிலையில், பெங்களூரு அணி மெதுவாக ரன் குவித்தது. தொடக்க வீரர்கள் கோலி 33 ரன்களும் டு பிளிஸிஸ் 44 ரன்களும், தினேஷ் கார்த்திக் 16 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

இவர்களைத் தவிர இதர வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கில் ஆட்டமிழக்க பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் ஆடிய லக்னோ அணியும் ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இறுதியில் லக்னோ அணி 19.5 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

10 ஆண்டுகள் காத்திருந்த பகை.. மீண்டும் களத்திலேயே மோதிக்கொண்ட கோலி -காம்பிர்.. ஆட்டத்தை மிஞ்சிய பரபரப்பு!

இந்த போட்டி முடிந்த பின்னர் வீரர்கள் கைகுலுக்கியபோது லக்னோ வீரர் நவீன் உல் காஹ் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டனர். பின்னர் லக்னோ வீரர் கையில் மேயர்ஸ் விராட் கோலியோடு பேசிக்கொண்டிருந்த நிலையில், அவரை காம்பிர் பேசவேண்டாம் என்பதுபோல இழுத்துச்சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விராட் கோலி காம்பிரிடம் ஏதோ கூற கோலிக்கும் காம்பிருக்கும் இடையே அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே இரு அணி வீரர்களும் இருவரையும் கட்டுப்படுத்தி அங்கிருந்து அழைத்துச்சென்றனர். மேலும் போட்டியின்போது விராட் கோலி காம்பிருக்கும் பதிலடி கொடுப்பது போல செய்கை காட்டியதும் சர்ச்சையானது. இந்த மோதல் காரணமாக கோலி மற்றும் காம்பிருக்கு 100 % அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

10 ஆண்டுகள் காத்திருந்த பகை.. மீண்டும் களத்திலேயே மோதிக்கொண்ட கோலி -காம்பிர்.. ஆட்டத்தை மிஞ்சிய பரபரப்பு!

கடந்த 2013-ம் ஆண்டு பெங்களுரு-கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில் கோலிக்கும் காம்பிருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த மோதல் பல கட்டங்களாக வெளியான நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் களத்திலேயே இருவரும் ஆக்ரோஷமாக மோதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories