விளையாட்டு

"ரஹானே T20 தொடரில் புதிய அவதாரம் எடுத்துள்ளார்" - இந்திய மகளிர் அணி ஜாம்பவான் மிதாலி ராஜ் புகழாரம் !

ரஹானே டி20 தொடரில் புதிய அவதாரம் எடுத்துள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் கூறியுள்ளார்.

"ரஹானே T20 தொடரில் புதிய அவதாரம் எடுத்துள்ளார்" - இந்திய மகளிர் அணி ஜாம்பவான் மிதாலி ராஜ் புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியோடு தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பின்னர் லக்னோ, மும்பை அணிகளை வீழ்த்தியது.

அதன்பின்னர் ராஜஸ்தான் அணியோடு அதிர்ச்சி தோல்வி அடைந்த சென்னை அணி அதன்பின்னர் பெங்களூரு, ஐதராபாத் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தியது. அதனைத் தொடர்ந்து கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய சென்னை அணி அதன்பின்னர் ராஜஸ்தான் அணியுடன் மீண்டும் தோல்வியைத் தழுவியது.

"ரஹானே T20 தொடரில் புதிய அவதாரம் எடுத்துள்ளார்" - இந்திய மகளிர் அணி ஜாம்பவான் மிதாலி ராஜ் புகழாரம் !

இந்த தொடரில் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சென்னை அணி வீரர் அஜிங்கிய ரஹானே திகழ்ந்து வருகிறார். மும்பை அணிக்கு எதிரான 19 பந்துகளில் அதிரடி அரைசதம் அடித்த ரஹானே கொல்கத்தா அணிக்கு எதிராக 29 பந்துகளில் 71 ரன்கள் விளாசி ஆட்டநாகனாக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ரஹானே நடந்துமுடிந்த சையது முஸ்தக் அலி டி20 தொடரில் 5 போட்டிகளில் கிட்டத்தட்ட 110 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். ஆனால் அதன்பின்னர் நடந்த ரஞ்சிக்கோப்பையில் 600 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினார். அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார்.

"ரஹானே T20 தொடரில் புதிய அவதாரம் எடுத்துள்ளார்" - இந்திய மகளிர் அணி ஜாம்பவான் மிதாலி ராஜ் புகழாரம் !

இந்த நிலையில், ரஹானே டி20 தொடரில் புதிய அவதாரம் எடுத்துள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், " இந்த முறைரஹானே தன்னுடைய போட்டியில் புதிய கட்டமைப்பை செய்துள்ளார். இவர் டி20 தொடருக்கு ஏற்றார் போல் தன்னுடைய ஆட்டத்தை மாற்றி அமைத்துள்ளார். இதற்காக ராஹானே தன்னுடைய ஷாட்களில் எந்த மாற்றமும் கொண்டுவரவில்லை ஆனால் அவர் தன்னுடைய அப்ரோச்சை மாற்றியுள்ளார்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories