விளையாட்டு

ரொனால்டோவின் சாதனை முறியடிப்பு.. ஐரோப்பிய கால்பந்தில் அதிக கோல் அடித்த வீரரான மெஸ்ஸி !

ரொனால்டோவை விட அதிக கோல் அடித்து டாப் 5 தொடர்களில் அதிக கோல் அடித்த வீரராக மெஸ்ஸி மாறியுள்ளார்.

ரொனால்டோவின் சாதனை முறியடிப்பு.. ஐரோப்பிய கால்பந்தில் அதிக கோல் அடித்த வீரரான மெஸ்ஸி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த போட்டியில் ரொனால்டோ கண்ணீரோடு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி ’பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்’ என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார்.

ரொனால்டோவின் சாதனை முறியடிப்பு.. ஐரோப்பிய கால்பந்தில் அதிக கோல் அடித்த வீரரான மெஸ்ஸி !

ஐரோப்பிய கால்பந்து தொடரில் இங்கிலாந்து நாட்டில் நடக்கும் பிரீமியர் லீக், ஸ்பெயின் நாட்டில் நடக்கும் லா லீகா, ஜெர்மனியில் நடக்கும் புண்டஸ்லீகா, இத்தாலியில் நடக்கும் சீரியா ஏ, பிரான்சில் நடக்கும் லீக் 1 ஆகிய தொடர்கள் பிக் 5 தொடர்கள் என அழைக்கப்படுகின்ற்ன. பார்வையாளர் மற்றும் வருவாய் ரீதியில் பிற தொடர்களை விட முன்னணியில் இருப்பதால் இவை உலகின் டாப் லீக் தொடர்களாக கருதப்படுகிறது. மேலும் உலகின் முன்னணி வீரர்களும் இந்த தொடரில்தான் ஆடி வருகின்றனர்.

இந்த டாப் 5 தொடர்களில் போர்த்துக்கல் நட்சத்திர வீரர் ரொனால்டோ அதிக கோல் 696 கோல் அடித்து அதிக கோல் அடித்த வீரராக வலம்வந்த நிலையில், தற்போது ரொனால்டோ அதிலிருந்து விலகி சவுதி லீக்குக்கு சென்றுவிட்டார். ஆனால் அவருக்கு பின் இரண்டாம் இடத்தில் இருந்த மெஸ்ஸி ரொனால்டோவின் சாதனையை முறியடிப்பர் என எதிர்பார்க்கப்பட்டது.

ரொனால்டோவின் சாதனை முறியடிப்பு.. ஐரோப்பிய கால்பந்தில் அதிக கோல் அடித்த வீரரான மெஸ்ஸி !

இந்த நிலையில் தற்போது பிரான்சின் PSG கிளப் அணிக்காக விளையாடிவரும் மெஸ்ஸி மோன்ட்பில்லர் அணிக்கு எதிராக கோல் அடித்ததன் மூலம் ரொனால்டோவை விட அதிக கோல் அடித்து டாப் 5 தொடர்களில் அதிக கோல் அடித்த வீரராக மாறியுள்ளார். அவர் தற்போதுவரை 697 கோல்கள் அடித்துள்ளார். அதே நேரம் ரொனால்டோவை விட குறைவான போட்டிகளில் இந்த சாதனையை அவர் எட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories