விளையாட்டு

1 மணி நேரத்தில் 9 விக்கெட்டுகள்.. தோல்வியின் பிடியில் இருந்து மீண்டு கோப்பையை தக்கவைத்த இந்தியா !

137-7 என்ற பரிதாப நிலையில் இருந்த இந்தியா அதில் இருந்து மீண்டு டெல்லி டெஸ்ட் போட்டியில் அபார வெற்றிபெற்றுள்ளது.

1 மணி நேரத்தில் 9 விக்கெட்டுகள்.. தோல்வியின் பிடியில் இருந்து மீண்டு கோப்பையை தக்கவைத்த இந்தியா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி மாறியுள்ளதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.

1 மணி நேரத்தில் 9 விக்கெட்டுகள்.. தோல்வியின் பிடியில் இருந்து மீண்டு கோப்பையை தக்கவைத்த இந்தியா !

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி ஒரு கட்டத்தில் 91-1 என்ற நல்ல நிலையில் இருந்தது.

ஆனால், ஒரே ஓவரில் இந்திய வீரர் அஸ்வின் உலகின் நம்பர் 1 வீரர் லபுசேனையும் உலகின் நம்பர் 2 வீரர் ஸ்மித்தையும் அடுத்தடுத்து வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். எனினும் ஆஸ்திரேலிய அணியில் கவாஜா மற்றும் ஹன்ட்ஸ்காப் ஆகியோர் சிறப்பாக ஆடியதால் அந்த அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் சமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

1 மணி நேரத்தில் 9 விக்கெட்டுகள்.. தோல்வியின் பிடியில் இருந்து மீண்டு கோப்பையை தக்கவைத்த இந்தியா !

பின்னர் ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த அணியை கோலி மற்றும் ஜடேஜா இணைந்து கொஞ்சம் மீட்டனர். ஆனால் மீண்டும் அடுத்தடுத்து இந்திய அணி விக்கட்டுகளை இழக்க 137-7 என்ற பரிதாப நிலையில் இந்திய அணி இருந்தது. ஆனால், பின்னர் ஜோடி சேர்ந்த அக்சர் படேல் -அஸ்வின் இணை 114 ரன்கள் குவித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. இறுதியில் இந்திய அணி 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் குவித்து வலுவான நிலையில் தான் இருந்தது. இந்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், அதிரடியாக ஆடிவந்த டிராவிஸ் ஹெட்டை முதல் ஒவரிலேயே அஸ்வின் காலி செய்தார்.

1 மணி நேரத்தில் 9 விக்கெட்டுகள்.. தோல்வியின் பிடியில் இருந்து மீண்டு கோப்பையை தக்கவைத்த இந்தியா !

அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடி சவாலான ரன்னை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணியின் வீரர்கள் அதிரடியாக ஆட போகிறேன் என ஸ்வீப் ஷாட்டாக ஆடி தங்கள் விக்கெட்டுகளை அஸ்வின், ஜடேஜாவிடம் இழந்தனர். அந்த அணியில் 8 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி வெறும் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதாவது ஆட்டம் தொடங்கி 1 மணி நேரத்தில் 9 விக்கெட்டுகளை அந்த அணி இழந்துள்ளது. ஜடேஜா 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வென்று 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் தற்போது இந்த போட்டியில் வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 137-7 என்ற பரிதாப நிலையில் இருந்த இந்தியா அதில் இருந்து மீண்டு இந்த போட்டியில் வெற்றிபெற்றதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories