சினிமா

காஷ்மீரில் விறுவிறு படப்பிடிப்பு.. பாதியில் வெளியேறிய ஒளிப்பதிவாளர்? சோகத்தில் LEO படக்குழு -காரணம் என்ன?

லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமசிம்மாவின் தாயார் காலமானார்.

காஷ்மீரில் விறுவிறு படப்பிடிப்பு.. பாதியில் வெளியேறிய ஒளிப்பதிவாளர்? சோகத்தில் LEO படக்குழு -காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம்தான் லியோ. திரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், கெளதம் மேனன் என திரைபட்டாளமே நடித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்துகொண்டிருக்கிறது.

காஷ்மீரில் விறுவிறு படப்பிடிப்பு.. பாதியில் வெளியேறிய ஒளிப்பதிவாளர்? சோகத்தில் LEO படக்குழு -காரணம் என்ன?

அனிருத் இசையமையத்திற்கு இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் தாயார் எதிர்பாராத விதமாக காலமானார். இதனால் மனோஜ் சென்னை வரவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக படப்பிடிப்பு சிறிது நாட்கள் ஒத்தி வைக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் சோகத்தில் உள்ளனர்.

காஷ்மீரில் விறுவிறு படப்பிடிப்பு.. பாதியில் வெளியேறிய ஒளிப்பதிவாளர்? சோகத்தில் LEO படக்குழு -காரணம் என்ன?

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பல்வேறு ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தனது ஆரம்ப காலத்தில் பம்மல் கே.சம்மந்தம், மதுர, திருப்பாச்சி, பிரியமான தோழி உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும், மலையாளம், தெலுங்கு மொழியில் வெளியான சில படங்களிலும் உதவியாக இருந்து வந்தார்.

காஷ்மீரில் விறுவிறு படப்பிடிப்பு.. பாதியில் வெளியேறிய ஒளிப்பதிவாளர்? சோகத்தில் LEO படக்குழு -காரணம் என்ன?

அதன்பிறகு 2009-ம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் வெளியான 'ஈரம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதன் பிறகு தனது இரண்டாவது படமே 'விண்ணைத்தாண்டி வருவாயா' கமிட் ஆனார். அதன் மூலம் திரையுலகை ஈர்த்த இவர், தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

காஷ்மீரில் விறுவிறு படப்பிடிப்பு.. பாதியில் வெளியேறிய ஒளிப்பதிவாளர்? சோகத்தில் LEO படக்குழு -காரணம் என்ன?

கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படத்திற்கும் இவர் தான் ஒளிப்பதிவாளர். மேலும் அந்த படத்தில் இடம்பெற்ற 'ஜாலியோ ஜிம்கானா' பாடலில் இவரும் சிறப்பு தோற்றத்தில் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த படத்தில் நடித்து வரும் திரிஷா, படப்பிடிப்பு தளத்தில் இருந்து பாதியில் வெளியேறியதாக தகவல் பரவியதற்கு அவரது தாயார், மறுப்பு தெரிவித்தார். மேலும் தற்போது காஷ்மீரில் உள்ள சிவலிங்கத்திற்கு சிவராத்திரியை முன்னிட்டு பூஜை செய்வது தொடர்பான வீடியோவையும் திரிஷா பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories