
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு த.வெ.க.வின் 6 மாதகால ஆட்சிக்காலத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், த.வெ.க.வினரின் தாக்குதல்கள் என சட்டம் - ஒழுங்கு நினைத்துக்கூட பார்த்திடாத அளவிற்கு உச்சம் தொட்டுள்ளது.
இந்த அவலம், தற்போது குழந்தைகள் கடத்தல் வரை சென்று, தமிழ்நாட்டு மக்களை பெரும் அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ளதை தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி கடுமையாக கண்டித்துள்ளார்.

“செஞ்சியில் சிறுமி காணாமல் போய் இன்றுடன் 30 நாட்கள் கடந்துவிட்டன. இன்னும் அந்தச் சிறுமி மீட்கப்படவில்லை. அதற்குள், செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் பகுதியில் இன்னொரு சிறுமியைக் கடத்த முயன்றதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஆறு மாதங்களாகியும் சிறிதும் பொறுப்பில்லாத இந்த தவெக ஆட்சியில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கும் நிலையில், இப்போது குழந்தை கடத்தலும் அதிகரித்துள்ளது.
காணாமல் போன சிறுமியை இன்னும் மீட்க முடியாமல், இந்த தவெக அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், இதற்கு இதுவரை முதலமைச்சர் விஜய்யிடமிருந்தோ, த.வெ.க அரசிடமிருந்தோ எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.






