விளையாட்டு

தினேஷ் கார்த்திக்கிடம் பல்பு வாங்கிய ஆஸ்திரேலிய வர்ணனையாளர்.. ரசிகர்கள் கிண்டல்.. நடந்தது என்ன ?

இந்தியா ஆஸ்திரேலியா போட்டியின் முடிவு குறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் கணிப்பு அப்படியே பலித்துள்ளதை குறிப்பிட்டு இணையவாசிகள் அவரை பாராட்டி வருகின்றனர்.

தினேஷ் கார்த்திக்கிடம் பல்பு வாங்கிய ஆஸ்திரேலிய வர்ணனையாளர்.. ரசிகர்கள் கிண்டல்.. நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி மாறியுள்ளதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.

தினேஷ் கார்த்திக்கிடம் பல்பு வாங்கிய ஆஸ்திரேலிய வர்ணனையாளர்.. ரசிகர்கள் கிண்டல்.. நடந்தது என்ன ?

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன்பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா 120 ரன்கள், அக்சர் படேல் 84, ரவீந்திர ஜடேஜா 70 ரன்கள் குவித்தனர். பின்னர் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அஸ்வினின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததோடு இரண்டாம் இன்னிங்ஸில் 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்து.

தினேஷ் கார்த்திக்கிடம் பல்பு வாங்கிய ஆஸ்திரேலிய வர்ணனையாளர்.. ரசிகர்கள் கிண்டல்.. நடந்தது என்ன ?

இந்த நிலையில், இந்த போட்டியின் முடிவு குறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் கணிப்பு அப்படியே பலித்துள்ளதை குறிப்பிட்டு இணையவாசிகள் அவரை பாராட்டி வருகின்றனர். இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் வர்ணனை செய்து வருகிறார்.

இந்த போட்டியின் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்து இந்தியா விளையாடிவந்தபோது வர்ணனை செய்த தினேஷ் கார்த்திக், 'என் கணிப்பின்படி, இந்திய அணி ஒரே ஒரு இன்னிங்சில் மட்டும் தான் பேட்டிங் செய்யும் என நினைக்கிறேன்' எனக் கூறினார்.

தினேஷ் கார்த்திக்கிடம் பல்பு வாங்கிய ஆஸ்திரேலிய வர்ணனையாளர்.. ரசிகர்கள் கிண்டல்.. நடந்தது என்ன ?

அப்போது அங்கிருந்த சக வர்ணனையாளர் மார்க் வாக், ' ஆட்டத்தின் போக்கு எப்படி நகருகிறது என்பதைப் பார்க்கலாம். ஆஸ்திரேலியர்கள் எளிதில் விட்டுவிடமாட்டார்கள். சில ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் போன்று இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் சிறந்தவர்கள் கிடையாது. எங்களிடம் சராசரி 60 ரன் வைத்துள்ள இருவர் உள்ளனர்' என்றார்.

ஆனால், தினேஷ் கார்த்திக் கூறியதைப் போலவே ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் தோல்வி அடைந்ததால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஒருமுறை மட்டுமே பேட்டிங் செய்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு பலரும் தினேஷ் கார்த்திகை பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories