விளையாட்டு

அம்மாடியோவ்..! உலகக்கோப்பை கால்பந்து தொடரின் பரிசுத்தொகை இத்தனை ஆயிரம் கோடியா? -மலைக்கவைக்கும் அறிவிப்பு!

கத்தாரில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான மொத்த பரிசுத்தொகையாக ரூ.3586 கோடி வழங்கப்படும் என பீபா (FIFA)அறிவித்துள்ளது.

அம்மாடியோவ்..! உலகக்கோப்பை கால்பந்து தொடரின் பரிசுத்தொகை இத்தனை ஆயிரம் கோடியா? -மலைக்கவைக்கும் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கிட்டத்தட்ட உலகத்தின் பாதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் 20-ம் தேதி கோலாகலமாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் தொடங்கவுள்ளது. ஆசியாவில் நடக்கும் இரண்டாவது கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும், மத்திய கிழக்கு பகுதியில் நடக்கும் முதல் கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கால்பந்து உலகக்கோப்பை தொடர் கத்தாரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த தொடர் பல்வேறு சர்ச்சைகளை சுமந்து வருகிறது. போட்டியை நடத்த உலக கால்பந்து கூட்டமைப்பான பீபாவுக்கு (FIFA)கத்தார் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தற்போது வரை கால்பந்து உலகை உலுக்கி வருகிறது.

அம்மாடியோவ்..! உலகக்கோப்பை கால்பந்து தொடரின் பரிசுத்தொகை இத்தனை ஆயிரம் கோடியா? -மலைக்கவைக்கும் அறிவிப்பு!

மேலும், இந்த தொடருக்கான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் சுரண்டலுக்கு ஆளானதாகவும்,அதில் பலர் போதிய பணி பாதுகாப்பு இல்லாமல் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கத்தாருக்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், மனித உரிமைகளை மதிக்காத நாட்டில் உலகக்கோப்பையை நடத்தக்கூடாது என தொடர்ந்து எதிர்ப்புகளும் எழுந்து வருகிறது.

எனினும், அந்த குற்றசாட்டுகளை புறம்தள்ளி நடைபெறவுள்ள இந்த தொடரில் 32 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொடருக்காக கத்தார் புதிய நகரத்தையே நிர்மாணித்துள்ளது. மெட்ரோ நிலையம், 8 மிகப்பெரிய கால்பந்து அரங்கம் என பிரமாண்டமான முறையில் இந்த தொடருக்காக கத்தார் செலவு செய்துள்ளது. இந்த தொடருக்காக மட்டும் கத்தார் அரசு 220 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாடியோவ்..! உலகக்கோப்பை கால்பந்து தொடரின் பரிசுத்தொகை இத்தனை ஆயிரம் கோடியா? -மலைக்கவைக்கும் அறிவிப்பு!
Handout

இந்த நிலையில், இந்த உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான பரிசுத்தொகையை உலக கால்பந்து கூட்டமைப்பான பீபா (FIFA) அறிவித்துள்ளது. அதன்படி இந்த தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.3586 கோடியாகும். இது ரஷ்யாவில் நடந்த கடந்த உலகக்கோப்பை தொடரை விட ரூ.328 கோடி அதிகமாகும்.

இதில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.342 கோடியும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.244 கோடியும், மூன்றாவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.219 கோடியும், நான்காவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.203 கோடியும் அளிக்கப்படவுள்ளன. மேலும், கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ.138 கோடி வழங்கப்படும் என்றும், 2 வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடியும், லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.73 கோடியும் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதில் பங்கேற்கும் அணிக்கு அணிகளுக்கும் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது .

banner

Related Stories

Related Stories