விளையாட்டு

”இதை செய்தால்தான் வெளிநாடுகளில் இந்திய அணி வெற்றிபெறும்” - BCCI-க்கு முன்னாள் வீரர்கள் கோரிக்கை !

வெளிநாட்டு லீக் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பிசிசிஐ-யை வலியுறுத்தியுள்ளனர்.

”இதை செய்தால்தான் வெளிநாடுகளில் இந்திய அணி வெற்றிபெறும்” - BCCI-க்கு முன்னாள் வீரர்கள் கோரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஐ.பி.எல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐ.பி.எல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

”இதை செய்தால்தான் வெளிநாடுகளில் இந்திய அணி வெற்றிபெறும்” - BCCI-க்கு முன்னாள் வீரர்கள் கோரிக்கை !

ஆனால் பிற நாடுகளில் நடக்கும் இதுபோன்ற லீக் தொடர்களால் ஐ.பி.எல் அளவு வெற்றியைப்பெற முடியவில்லை. மேலும் பிற நாடுகளில் நடக்கும் லீக் தொடர்களில் இந்திய வீரர்கள் கலந்துகொள்ள பிசிசிஐ அனுமதிக்காத நிலையில் இந்திய வீரர்கள் அதில் பங்கேற்பதில்லை. இதன் காரணமாக கிரிக்கெட் பிரபலமாக உள்ள இந்தியாவில் அந்த நாடுகளின் லீக் போட்டியில் பெரிய அளவு பிரபலமாகவில்லை.

அதேநேரம் இந்தியாவில் தொடர்ந்து ஐ.பி.எல் ஆடும் வெளிநாட்டு வீரர்கள் இந்திய மைதானங்களில் தொடர்ந்து ஆடி இந்தியாவில் நடக்கும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக ஆடுகிறார்கள். ஆனால் வெளிநாட்டு லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் ஆடாத காரணத்தால் அங்கு இந்திய வீரர்கள் சிரமத்தை சந்திக்கின்றார்கள்.

”இதை செய்தால்தான் வெளிநாடுகளில் இந்திய அணி வெற்றிபெறும்” - BCCI-க்கு முன்னாள் வீரர்கள் கோரிக்கை !

இதனால் வெளிநாட்டு லீக் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக பிசிசிஐ-க்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் தற்போது அந்த கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், முன்னாள் வீரர்களான ஸ்டீபன் பிளமிங், அனில் கும்ப்ளே மற்றும் டாம் மூடி ஆகியோர் விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதில் மூவருமே வெளிநாட்டு லீக் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories