விளையாட்டு

ரோஹித்,கோலி சாதனையை யாரும் முடியடிக்கலாம், ஆனால் தோனியின் சாதனையை ஏதும் செய்யமுடியாது! -கம்பிர் புகழாரம்!

தோனியைப்போல எந்த இந்திய கேப்டனும் மூன்று ஐசிசி கோப்பைகளை அடைய முடியும் என்று நான் நினைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் கூறியுள்ளார்.

ரோஹித்,கோலி சாதனையை யாரும் முடியடிக்கலாம், ஆனால் தோனியின் சாதனையை ஏதும் செய்யமுடியாது! -கம்பிர் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் அடிலைட்டில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி களமிறங்கியது.

இந்த போட்டியில் வலுவான தொடக்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டிய ராகுல் 5 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சிறிது நேரம் களத்தில் நின்ற கேப்டன் ரோஹித் சர்மா 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ரோஹித்,கோலி சாதனையை யாரும் முடியடிக்கலாம், ஆனால் தோனியின் சாதனையை ஏதும் செய்யமுடியாது! -கம்பிர் புகழாரம்!

பின்னர்வந்த இந்திய அணியின் நாயகம் சூர்யகுமாரும் 14 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த ஹர்டிக் பாண்டியா மற்றும் கோலி ஆகியோர் நிதானமாக ஆட்டத்தை கொண்டு சென்றனர். பின்னர் கோலி அவ்வப்போது பௌண்டரிகள் அடித்து அரைசதத்தை கடந்தார். அரைசதமடித்த கையோடு கோலி ஆட்டமிழக்க இறுதியில் ருத்திர தாண்டவம் ஆடிய ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஹேல்ஸ்,பட்லர் ஜோடி சிறப்பான தொடக்கம் அளித்தது. இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த இணை 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் குவித்தது.அதன்பின்னும் அபாரமாக ஆடிய இந்த ஜோடி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்து இறுதிசுற்றுக்கு முன்னேறியது.

ரோஹித்,கோலி சாதனையை யாரும் முடியடிக்கலாம், ஆனால் தோனியின் சாதனையை ஏதும் செய்யமுடியாது! -கம்பிர் புகழாரம்!

இந்திய அணியின் தோல்வியைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி கடைசியாக டி20 உலககோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி ஆகியவற்றை கைப்பற்றியிருந்தது. ஆனால் அதன்பின்னர் இந்திய அணி எந்த முக்கிய கோப்பைகளை வெல்லவில்லை.

இதனை குறிப்பிட்டு பல ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் தோனி குறித்து தற்போது பேசிவருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் எம்எஸ் தோனியின் சாதனையைப் பாராட்டினார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், " வரும்காலத்தில் யாராவது வந்து ரோஹித் சர்மாவை விட அதிக இரட்டை சதங்கள் அடிப்பார்கள். அதேபோல விராட் கோலியை விட அதிக சதங்களும் அடிப்பார்கள். ஆனால் எந்த இந்திய கேப்டனும் மூன்று ஐசிசி கோப்பைகளை அடைய முடியும் என்று நான் நினைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories