தமிழ்நாடு

வயதான தந்தையோடு இருசக்கர வாகனத்தில் லடாக் பயணம்.. தமிழ்நாடு இளைஞரின் அசரவைக்கும் சாதனை !

உடலைநலமில்லாத தந்தைக்கு உடல்நலம் சரியாக இருசக்கர வாகனத்தில் லடாக் பயணம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.

வயதான தந்தையோடு இருசக்கர வாகனத்தில் லடாக் பயணம்.. தமிழ்நாடு இளைஞரின் அசரவைக்கும் சாதனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

90ஸ் கிட்ஸ்களின் கனவு இடமாக ஒரு காலத்தில் கோவா இருந்தது. அங்கு நண்பர்களோடு செல்ல விரும்பாத நபர்களே இருக்க மாட்டார்கள். அது சிலருக்கு நடந்தாலும் தற்போது வரை பலருக்கு அது கனவாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது 2K கிட்ஸ்களின் கனவு இடமாக லடாக் இருக்கிறது.

இந்தியாவின் எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் ஜம்மு காஷ்மீரில் இருந்து வருகிறது. பனி மூடியிருக்கும் அந்த இடத்துக்கு செல்வது தற்போது பலரின் கனவாகவே இருந்து வருகிறது. பலர் அந்த கனவை நிறைவேற்றியும் இருக்கிறார்கள். அதிலும் தற்போது லடாக்குக்கு இருசக்கர வாகனத்தில் செல்வது சாதனையாகவே இருந்துவருகிறது.

வயதான தந்தையோடு இருசக்கர வாகனத்தில் லடாக் பயணம்.. தமிழ்நாடு இளைஞரின் அசரவைக்கும் சாதனை !

இந்த நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த பட்டதாரி இளைஞரான மணிகண்டன் என்பவர் தனது தந்தையோடு லடாக்குக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்ட நிலையில் அந்த சம்பவம் வெளிவந்துள்ளது.

உடலைநலமில்லாத தந்தைக்கு உடல்நலம் சரியாகவே இந்த சாகச பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக மணிகண்டன் கூறியுள்ளார். இதற்காக தனது இருசக்கர வாகனத்தை தந்தை பயணம் மேற்கொள்ள ஏதுவாக மாற்றியமைத்துள்ளார். இது தொடர்பான தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த இளைஞருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories