தமிழ்நாடு

’அழக்கூடாது’... கொளத்தூர் மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!

கொளத்தூர் மக்களுக்கு நேரில் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

’அழக்கூடாது’... கொளத்தூர் மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், தமிழகத்தில் 'தொங்கு சட்டசபை' உருவாகியுள்ளது. த.வெ.க 108 இடங்களிலும், தி.மு.க 59 தொகுதிகளிலும், அ.தி.மு.க 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் பின்னடைவைச் சந்தித்த போதிலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரடியாக அங்கு சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாகத் திறந்தவெளி ஜீப்பில் வீதி வீதியாகச் சென்று கொளத்தூர் தொகுதி மக்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அப்போது அவரைப் பார்த்த பொதுமக்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுதனர். இதைக் கண்ட மு.க. ஸ்டாலின், "அழக்கூடாது... அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்" எனப் புன்னகையுடன் கூறி அவர்களுக்கு நம்பிக்கையூட்டினார்.

“மு.க.ஸ்டாலின் அவர்கள் தோற்றது மிகுந்த வேதனையாக இருக்கிறது. இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. மக்களுக்கு இவ்வளவு நன்மைகளைச் செய்தவருக்கு இப்படி ஒரு முடிவு ஏற்பட்டதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை” என அப்பகுதி மக்கள் உருக்கமாகத் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டிற்காகவும், குறிப்பாகக் கொளத்தூர் தொகுதிக்காகவும் மு.க. ஸ்டாலின் செயல்படுத்திய திட்டங்களை நினைவு கூர்ந்து, மக்கள் அவருக்கு நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை அளித்தனர்.

banner

Related Stories

Related Stories