தமிழ்நாடு

2026 சட்டமன்ற தேர்தல் : 11 ஆவது தோல்வி - 16 தொகுதிகளில் டெபாசிட் இழந்த அ.தி.மு.க!

16 தொகுதிகளில் அ.தி.மு.க டெபாசிட் இழந்துள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல் : 11 ஆவது தோல்வி - 16 தொகுதிகளில் டெபாசிட் இழந்த அ.தி.மு.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2026 சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தொங்கு சபை அமைந்துள்ளது. த.வெ.க 108 இடங்களிலும், தி.மு.க 59 தொகுதிகளிலும், அ.தி.மு.க 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்த அ.தி.மு.கவிற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடங்களைப் புகட்டியுள்ளனர். 10 தோல்விகளைக் கண்ட எடப்பாடி பழனிசாமி, 11-வது தோல்வியைச் சந்தித்துள்ளார். அதைவிட 16 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.

1.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி

2.ராயபுரம்

3.எழும்பூர்

4.திரு.வி.க.நகர்

5.ஆர்.கே.நகர்

6.வில்லிவாக்கம்

7.கொளத்தூர்

8.திருவொற்றியூர்

9.மாதவரம்

10.தூத்துக்குடி

11.திருச்சுழி

12.மதுரை வடக்கு

13.மதுரை கிழக்கு

14.கம்பம்

15.ஆத்தூர்

16.பாளையங்கோட்டை

ஆகிய 16 தொகுதிகளில் அ.தி.மு.க டெபாசிட் இழந்துள்ளது. குறிப்பாக 167 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க, 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

அ.தி.மு.கவிற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பதிலடி கொடுத்து இருக்கிறார்கள்.அதேபோல் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் இந்தக் கூட்டணியை முற்றாக நிராகரித்துள்ளார்கள்.

banner

Related Stories

Related Stories