தமிழ்நாடு

நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

சிதம்பரம் நகராட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

நாளை (ஜூலை 15) முதல்  ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (14.07.2025) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஊடகச் செயலாளர் பி.அமுதா, பத்திரிகையாளர்களை சந்தித்து அளித்த பேட்டி பின்வருமாறு,

நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். நான்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசாங்கத்தின் தகவல் தொடர்பு அலுவலர்களாக நியமித்துள்ளார்கள். அதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், முதலமைச்சர் அவர்கள் விரும்புவது என்னவென்றால், அரசாங்கத்தின் செயல்பாடுகள், திட்டங்கள், தகவல்கள் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டும்.

அதற்கு ஊடகவியலாளர்களுக்கு நாம் சரியான முறையில் தகவல்களை எடுத்துரைக்க வேண்டும். Communication clear-ஆக இருக்க வேண்டும்; விரைவாக இருக்க வேண்டும். துள்ளியமாக இருக்கவேண்டும் என்பதற்காக தான் இந்த ஏற்பாட்டை முதலமைச்சர் அவர்கள் செய்திருக்கிறார்கள்.

நான்கு அதிகாரிகள் இன்று (ஜூலை 14) நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் நான் முதலாவது அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளேன். எனக்கு சில துறைகள் வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நான் வகிக்கும் வருவாய்த்துறை, சமூக நலத் துறை, தொழிலாளர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இதுபோன்று ஏழெட்டு துறைகள்

எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தந்த துறை சம்பந்தப்பட்ட செயலாளர்களிடம் ஒருங்கிணைந்து ஏதாவது புதிய தகவல்கள், திட்டங்கள், ஏதாவது பிரச்சனை இருந்தால் அதனை தெளிவுபடுத்தி, அவர்களது செயலாளரிடம் ஒருங்கிணைந்து அந்தத் துறையின் திட்டங்களையும், தகவல்களையும் தெரிவிப்பதற்காக என்னை நியமித்திருக்கிறார்கள்.

இன்றைக்கு focus செய்ய வேண்டியது என்னவென்றால், நாளை (ஜூலை 15) நம்முடைய முதலமைச்சர் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற ஒரு திட்டத்தினை கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்கப் போகிறார்கள். அந்தத் துறையின் சிறப்பு அதிகாரியாக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். எங்களுடைய துறை பொதுத் துறையின் கீழ் வருகின்றது.

பொதுத்துறையின் செயலாளர் இங்கு இருக்கிறார்கள் மற்றும் செய்தித் துறை செயலாளர் அவர்களும் இருக்கிறார்கள். இந்தத் திட்டம் சம்பந்தமாக உங்களுக்கு நாங்கள் என்னென்ன ஏற்பாடு செய்திருக்கிறோம் - என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்பதை சொல்வதற்காகதான் இந்த சிறப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

உங்களுக்கு ஏற்கனவே தெரியும் - நம்முடைய துறை முகவரி துறை - இது 2021-ஆம் ஆண்டு குறிப்பாக முதலமைச்சர் என்ன சொல்கிறார் என்றால், முதலமைச்சர் அவர்கள் பயணம் செய்யும்போது நிறைய நபர்கள் மனுக்கள் கொடுப்பார்கள். அந்த மனுக்களை எல்லாம் முதலமைச்சர் அவர்கள் பெற்றுக்கொண்டு நம்முடைய CM Cell மூலமாக மற்ற துறைகளுக்கெல்லாம் கொடுத்து தீர்வு கண்டிருந்தோம்.

அதுமட்டுமில்லாமல், கோட்டூர்புரத்தில் கால்சென்டர் ஒன்றை ஆரம்பித்திருக்கிறோம். நூறு பேரைக் கொண்ட கால் சென்டர் - நம்முடைய கால் சென்டர் நம்பர் 1100 - அதன் மூலமாக பொதுமக்கள் தங்களுடைய குறைகள், அவர்களுடைய சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறார்கள்.

நம்முடைய தலைமைச் செயலகத்தில் CM Cell ஒன்று இருக்கிறது. அங்கு நேரடியாக முதலமைச்சருக்கு தரவேண்டிய மனுக்களை எல்லாம் CM Cell-ல் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மூன்று விஷயங்களையும் ஒருங்கிணைத்து “முதல்வரின் முகவரித் துறை” என்ற துறை நவம்பர் மாதம் 2021-ம் ஆண்டு துவங்கப்பட்டது.

குறிப்பாக இதனுடைய நோக்கம் என்னவென்றால், மக்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது அதை அரசாங்கத்திடம் தெரிவிப்பதற்கும், நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அனைத்து துறைகளின் மூலமாக இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு ஒரு விரைவான தீர்வு காண வேண்டும் என்பதுதான் இந்தத் துறையின் நோக்கம்.

இப்போது இந்த நான்கு ஆண்டுகளில், 1 கோடியே 5 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 30.06.2025 வரைக்கும் 1 கோடியே 1 இலட்சம் மனுக்கள் disposal ஆகிவிட்டது. முதலமைச்சர் அவர்கள் feel செய்வது என்னவென்றால், பொதுமக்கள் பல்வேறு திட்டங்களில் பயனடைவதற்காக நிறைய அலுவலகங்களுக்கும், மாவட்ட அளவிலான அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.

இதனால், நிறைய சிரமத்திற்குள்ளாகிறார்கள். மாவட்ட நிர்வாகம் மக்களை நோக்கி சென்று வீட்டிற்கு அருகாமையிலேயே திட்டத்தின் பயன்களை ஏன் தரக்கூடாது என்ற நோக்கத்திற்காக முதலமைச்சர் அவர்கள் “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தை 2023-ல் அறிவித்தார்கள்.

நாளை (ஜூலை 15) முதல்  ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

முதலாவதாக, நகரப் பகுதிகளில் இந்தத் திட்டம் நடைபெற்றது. சென்னை உள்ளிட்ட அனைத்து நகரப் பகுதிகளில் இந்த முகாம்கள் நவம்பர் 23 முதல் ஜனவரி 24 வரை நடைபெற்றது. அந்த முகாம்களில் குறிப்பாக 2058 முகாம்கள் நடைபெற்றன. ஒன்பது இலட்சத்து 5 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, பொதுமக்களின் குறை சம்பந்தமான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் என்ன மாதிரியான மனுக்கள் வருகின்றது என்று ஆராய்ந்து செய்து பார்த்ததில், பட்டா மாற்றம், மின்னிணைப்பு பெயர் மாற்றம், வரி உரிமம் அனுமதி, முகவரி மாறி வேறு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு மாறி போவது போன்ற நபர்களுக்கு இந்த முகாம்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதுபோல, சமூகநல பாதுகாப்புத் திட்டம், ஓய்வூதியம், இலவச வீட்டு மனை பட்டா, இதுபோன்ற டாப் 10-ல் ஆய்வு செய்து வந்தது.

அடுத்த கட்டமாக, ஊரகப் பகுதிகளில் முகாம் நடத்தினால் என்ன என்று பார்த்தபோது, ஊரகப் பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டது. அது ஜுலை 2024-ல் ஆரம்பித்து செப்டம்பர் வரை நடைபெற்றது. அதில் 2,344 முகாம்கள் நடைபெற்றன. 12 இலட்சத்து 81 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டது. அந்த முகாம்களில் பெறப்பட்ட 95 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது.

இன்னும் சில மனுக்கள் குறிப்பாக வருவாய் துறையைச் சார்ந்த இந்த பட்டா கேட்டு மனு செய்தவர்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதையும் சரிபார்க்கப்பட்டு உரிய நேரத்தில் தீர்வு காணப்பட்டு வருகிறது.

கிராமப் பகுதிகளில், பொதுமக்கள் என்ன மாதிரி எதிர்ப்பார்க்கிறார்கள் என்றால், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டை, ரேசன் அட்டை – அதில் பெயர் மாற்றம் – மின்னிணைப்பு பெயர் மாற்றம் – மாற்றுத் திறனாளிகளுக்கான சாதனங்கள் – பட்டா மாற்றுச் சான்றிதழ் இதுபோன்று பல்வேறு துறைகளிலிருந்து மனுக்கள் பெறப்படுகிறது.

இதன் முக்கியமான நோக்கம் என்னவென்றால், மக்கள் அதிகமான நாடும் தேவைகள், services scheme – இவைகளெல்லம், மக்கள் எங்கு வசிக்கிறார்களோ அங்கு அவர்களின் வீட்டின் அருகாமையிலேயே முகாம்கள் நடத்தி வழங்கப்படவேண்டும். இதுதான் இதனுடைய நோக்கம். இந்த இரண்டு கட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த feedback கிடைத்த பிறகு, இந்த முகாம்களை மக்கள் மிகவும் விரும்புகிறார்கள் – இவைகளெல்லாம் நாம் தொடர்ச்சியாக நடைபெறவேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் மிகவும் விரும்பினார்கள்.

முதல்வரின் முகவரி என்று மூன்றாவது கட்டமாக ஆரம்பித்தோம். இந்த வருடம் ஜனவரி மாதம் 21-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு 30.06.2025 வரை அந்த முகாம்கள் நடைபெற்றன. இதன் நோக்கம் என்னவென்றால், குறிப்பாக SC, ST மக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

ஏற்கனவே கடந்த முகாம்கள் நடத்தப்பட்டபோது சில நபர்களுக்கு தெரியவில்லை - வரமுடியவில்லை – எங்கள் ஊரில் முகாம்கள் வைத்தால் வரமுடியும் என்று சொன்னார்கள். ஆதலால், முதலமைச்சர் அவர்கள் சிறப்பு முகாம்கள் நடத்துங்கள் என்று கூறியதின் அடிப்படையில், SC ST மக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த சிறப்பு முகாம்களில் 433 முகாம்கள் நடைபெற்றன. ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, அதில் ஒரு இலட்சத்து 47 ஆயிரம் மனுக்களுக்கு disposal செய்யப்பட்டது. மீதமுள்ளவற்றை நாங்கள் disposal செய்து கொண்டிருக்கிறோம். அந்த சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட மனுக்களுக்கும் நாம் தீர்வு கண்டிருக்கிறோம். மீதமுள்ளவற்றிற்கும் தீர்வு காணப்பட்டும் வருகிறது.

தற்போது அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறோம். மூன்றாவது கட்டத்தில் சொன்னது போல, எங்களுக்கு முகாம்கள் நடத்தப்பட்டது. தெரியவில்லை – நாங்கள் வெளியூருக்கு சென்று விட்டோம் – எங்களுக்கு யாரும் சொல்லவில்லை என்பதால் தான், இந்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார்கள் – மக்களுக்கு நாம் முகாம்கள் நடத்துவது பற்றி தெரியபடுத்தவேண்டும் என்பதற்காக தான் இந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.

முதலமைச்சர் அவர்கள் கூறியது என்னவென்றால், முகாம்கள் நடத்தும் முன்பே நாம் தன்னார்வலர்களை அனுப்பிவைத்து இந்த தகவல்களை தெரிவிக்கப்பட வேண்டும். இது போன்று சிறப்பு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். இந்த திட்டத்தில் மூலம் இந்த துறைகளின் மூலமாக இவ்வளவு சேவைகள் வழங்கப்போகிறது.

நகர்ப்புற பகுதியாக இருந்தால், 13 துறைகள் மூலமாக 43 சேவைகள் வழங்கப்படும். ஊரகப் பகுதிகளாக இருந்தால், 15 துறைகள் மூலமாக 46 சேவைகள் வழங்கப்படும். இதில், எந்த சேவைகள், எந்த துறை என்பது, எப்படி தெரிந்துகொள்வது என்றால், ஃபேஸ் 1 மற்றும் ஃபேஸ் 2-இல் மக்கள் எதற்கெல்லாம் நிறைய வருகிறார்களோ அதற்கு துறைகளையும் அதற்கு சம்மந்தமான திட்டங்களையும் நாம் இந்த முறை சேர்த்துள்ளோம்.

இந்த அனைத்து திட்டங்களிலும் பார்த்தோமென்றால், விண்ணப்பங்களை பெற்று நாம் அதை துறைகளுக்கு அனுப்பி, துறைகள் மூலம் வரும் பதில்களை உடனடியாக மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் யாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது? எங்கு அனுப்பப்பட்டுள்ளது? எத்தனை நாட்களாக அங்கு இருக்கிறது? அவர் என்ன பதில் கொடுத்திருக்கிறார் என்பது வரை இதில் பார்த்துக்கொள்ள முடியும்.

30 நாட்கள் கடந்துவிட்டால், சம்மந்தப்பட்ட துறைகளில் இவ்வளவு விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கிறது என்று நினைவூட்டல் அனுப்பிவிடுவோம். அதேபோல், அவர்கள் அளிக்கும் பதில் திருப்திகரமாக இல்லையென்றால், மக்கள் எங்களிடம் மேல்முறையீடு செய்யலாம். நாங்கள் மனு போட்டோம். இது போல் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த பதில் திருப்திகரமாக இல்லை என்று சொன்னால், நாங்கள் அடுத்த உயர்நிலை அதிகாரிகளுக்கு அவ்விண்ணப்பத்தினை அனுப்பி, அதற்கும் உரிய நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறக்கூடிய மனுக்களெல்லாம் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். பேஸ் 1 மற்றும் பேஸ் 2-க்கு 30 நாட்கள் கொடுத்திருந்தோம். ஆனால், சில விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு காண முடியவில்லை என்று சொன்னார்கள்.

அந்த feedback-க்கும் பெற்று 45 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். இதே அறிவுரைகளையும் அனைத்து துறைகளுக்கும் நாங்கள் கொடுத்துவிட்டோம்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் சிறப்பு என்னவென்றால், நான் சொன்னது போல், பல்வேறு துறைகளின் சேவைகள், முகாம் நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வீடு வீடாக சென்று தன்னார்வலர்கள் மூலமாக - நீங்கள் இந்த முகாமிற்கு வர வேண்டும்.

உங்கள் ஊரில் இந்த முகாம் நடைபெற இருக்கிறது. உங்கள் ஊரில் உள்ள பள்ளிகள், கல்யாண மண்டபம், சமுதாயக் கூடம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடத்தப்போகிறோம். அங்கு இதுபோன்ற துறைகள் மூலமாக சேவைகள் வழங்கப்போகிறோம் என்பதையும், இந்த திட்டங்களில் தகுதிபெற வேண்டும் என்றால், நீங்கள் என்னென்ன தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

நாளை (ஜூலை 15) முதல்  ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

என்ன ஆவணங்கள் கொண்டு வர வேண்டும் என்பதை கூறும்போது, முகாம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனைத்து ஆவணங்களோடு தயார் நிலையில் மக்கள் இருப்பார்கள் என்றால், மக்கள் விண்ணப்பித்த பிறகு இரத்து செய்யப்படும் நிலை, ஏமாற்றமோ இல்லாமல் நல்ல முறையில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக தான் முதலமைச்சர் அவர்கள் இந்தத் திட்டம் கொண்டு வந்துள்ளார்கள்.

இந்தப் பணிக்காக 1 இலட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இந்த திட்டத்தின் முகாம் நாளை (15.7.2025) அன்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் துவங்கி வைக்க உள்ளார்கள். நவம்பர் மாதம் வரை இது தொடரும். மொத்தம் 10,000 முகாம்கள் நடத்தப்போகிறோம். நகர்ப்புறத்தில் 3,738 முகாம்களும், ஊரகப் பகுதிகளில், 6,232 முகாம்களும் என மொத்தம் 10,000 முகாம்கள்.

முதலில் 2,000 முகாம்கள் நகர்ப்புறங்களிலும், 2300 ஊரகப்பகுதிகளிலும் என 4300 முகாம்கள் தான் நடத்தியிருக்கிறோம். இதை அப்படியே இரட்டிப்பு ஆக்கியிருக்கிறோம். முகாம்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தியதற்கு என்ன அர்த்தம் என்றால், இன்னும் அருகில் சென்றுவிட்டோம் என்று அர்த்தம். அப்போது, 20,000 மக்கள் தொகைக்கு ஒரு முகாம் என இருந்ததை, 10,000 மக்கள் தொகைக்கு ஒரு முகாம் நடத்த இருக்கிறது.

அதனால், இன்னும் மக்களுக்கு அருகாமையில் சென்று முகாம் நடத்த இருக்கிறோம். மக்களுக்கு தகவல்களை கொடுத்து விடுகிறோம். மக்களுக்கு துரிதமாக இந்த முகாம்கள் மூலமாக சேவைகள் கிடைக்கும்.

15.7.2025 முதல் முகாம்கள் நடத்தப்படுவதால், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் சிறப்பான பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்ட நிருவாகத்தில் உள்ள நம்முடைய சமூக பாதுகாப்பு துறையைச் சார்ந்த Nodal Officer (SDC (SSS)) அவர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளோம்.

அனைத்தும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு கணிணி ஆய்வாளர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளோம்.

தன்னார்வலர்களுக்கும் கையேடு அளிக்கப்பட்டு அவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, வீடு வீடாக அனுப்பி வைத்திருக்கிறோம். அனைத்தும் தயார்நிலைப்படுத்தி, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் நாளை தொடங்கப்படும் இந்தத் திட்டத்திற்கு தயார் நிலையில் இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துள்ளார்கள்.

நாளை முதல் நடைபெறவுள்ள இந்த முகாம்கள் முதல் பேஸ்-இல் 15.7.2025 முதல் 15.8.2025 வரை செயல் திட்டம் வாங்கியிருக்கிறோம். ஏனென்றால், இந்த நடைமுறை எப்படி செயல்படுகிறது என்பது பார்த்துவிட்டால், அதற்கு தகுந்தவாறு திட்டமிடுவதற்கு ஏதுவாக இருக்கும்.

முதல் பேஸ்-இல் முகாம்களின் எண்ணிக்கை 3,563 (ஒரு மாதத்தில்), நகர்ப்புற பகுதிகளில் 1428 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 2,135 முகாம்கள், தன்னார்வலர்கள் 28370 பேர் பயன்படுத்தி இந்த முகாம்களுக்கான மக்களுக்கு விழிப்புணர்வு அளித்து விண்ணப்பங்கள் அளித்திருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் அவர்கள் 15.7.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படும். அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த மூத்த அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் இந்த முகாம்களில் கலந்துகொள்வார்கள். ஒரு மாவட்டத்தில் சுமார் 6 முகாம்கள் நடைபெறும். வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 நாட்கள் முகாம்கள் நடைபெறும்.

தொடர்ச்சியாக நவம்பர் மாதம் வரை நடைபெறும். கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, வாண்டையார் திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். நகராட்சிப் பகுதிகளில் 11 வார்டுகள் 90 குடியிருப்புகளுக்கு தேவைப்படும் குடும்பங்களுக்கு வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்கள் கொடுத்திருக்கிறார்கள். இந்த முகாம்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அவர்கள், இந்த முகாம்களுக்கு அதிக மக்கள் வருவதையொட்டி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான ராம்ப், சக்கர நாற்காலி வசதிகள், காத்திருக்கும் பகுதி என அனைத்தும் சரியாக செய்துதரப்பட வேண்டும் என்று, சென்ற வாரம் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோனை செய்து அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.

இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நாங்கள் செய்திருக்கிறோம். இந்த முகாம்கள் வெற்றிகரமாக இருக்கும். இந்த தகவல்களையெல்லாம் மக்களுக்கு எடுத்துசொல்லி, அவர்கள் சிரமப்படாமல் அவர்களின் வீட்டின் அருகாமையில் நடைபெறும் முகாம்களில் கலந்துகொள்ள வேண்டும். இந்த முகாம்கள் தொடர்ந்து 4 மாதங்கள் நடைபெற உள்ளது. இதற்காக “உங்களுடன் ஸ்டாலின்” என்ற Website தயார் செய்யப்பட்டுள்ளது. இதையும் நாளை தொடங்கிவிடுவோம்.

அதில் நாளைக்கு எங்கு எல்லாம் முகாம்கள் நடைபெறவுள்ளது என்றும், நாளை மாலையில், அதற்கு மறுநாள் எங்கெல்லாம் முகாம்கள் நடைபெறவுள்ளது என்று நாள் வாரியான அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட வாரியாக ஒரு மாதத்திற்கான அட்டவணையையும் நாங்கள் பதிவேற்றியுள்ளோம்.

இதனால் மக்கள் அவர்களின் பகுதிகளில் எப்போது நடைபெறவுள்ளது என்பதை பார்த்துக்கொண்டு அன்றைக்கு கலந்துகொண்டு விண்ணப்பங்கள் வழங்கினால், தகுதியின் அடிப்படையில் தேவையான சேவைகளை கண்டிப்பாக இந்த முகாம்கள் மூலம் தீர்வு காண முடியும்.

banner

Related Stories

Related Stories