விளையாட்டு

"உலகக்கோப்பையில் இவர் இல்லாவிட்டால் இந்தியாவுக்கு அது பேரிழப்பு" -ஷேன் வாட்சன் கருத்து !

டி20 உலகக் கோப்பையில் பும்ரா இல்லையென்றால் இந்திய அணிக்கு அது பேரிழப்பாகும் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

"உலகக்கோப்பையில் இவர் இல்லாவிட்டால் இந்தியாவுக்கு அது பேரிழப்பு"  -ஷேன் வாட்சன் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த வியாழக்கிழமை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி செய்தி எட்டியது. ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் விளையாடமாட்டார் என்று கூறப்பட்டது. இது முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. இன்றைய காலகட்டத்தில் உலகின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் பும்ரா.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் முன்னணி பௌலராக அவர் தான் இருக்கிறார். அவர் இல்லாமல் ஆடினால் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் வாய்ப்பு வெகுவாகக் குறைந்து விடும். ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் இந்த உலகக் கோப்பை தொடருக்கு ஏற்கெனவே ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இல்லாமல் தான் களமிறங்குகிறது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி.

"உலகக்கோப்பையில் இவர் இல்லாவிட்டால் இந்தியாவுக்கு அது பேரிழப்பு"  -ஷேன் வாட்சன் கருத்து !

பும்ராவின் வேலைப்பளுவை சரியாக கையாள்வதே கடந்த சில வருடங்களாக இந்திய அணி நிர்வாகத்தின் பிரதானமாக இருந்தது. 2022 ஐ.பி.எல் தொடர் முடிந்து இந்திய அணி இதுவரை 24 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. ஆனால் அவற்றுள் வெறும் 3 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடியிருக்கிறார்.

28 வயதான ஜஸ்ப்ரித் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியிலும், சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 2 போட்டிகளிலும் விளையாடினார். முன்பு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரிலும் பும்ராவின் பெயரும் இடம் பெற்றது. ஆனால் அவருக்கு முதுகு வலி காரணமாக அந்தத் தொடரிலிருந்தும் ஓய்வளிக்கப்பட்டிருந்தது.ஆரம்பத்தில் அவர் உலகக் கோப்பையில் ஆடமாட்டார் என்று செய்திகள் வந்திருந்தாலும், அடுத்த நாள்களில் பும்ரா நிச்சயம் உலகக் கோப்பைக்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

"உலகக்கோப்பையில் இவர் இல்லாவிட்டால் இந்தியாவுக்கு அது பேரிழப்பு"  -ஷேன் வாட்சன் கருத்து !

இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார், அவர் கூறியதாவது, ''பும்ராவுக்கு மாற்று உலகில் யாரும் இல்லை. டி20 உலகக் கோப்பையில் பும்ரா இல்லையென்றால் இந்திய அணிக்கு அது பேரிழப்பாகும். நம்பமுடியாத திறமை படைத்த பும்ரா சிறந்த தாக்குதல் பந்து வீச்சையும் தொடுக்கக் கூடியவர். பும்ரா இல்லாமல் ஒரு இன்னிங்ஸை முடிப்பது என்பது இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories