இந்தியா

பூஜைக்கான ஆப்பிளை சாப்பிட்ட சிறுவன்.. கொடூரமாக தாக்கிய ஆசிரியர்.. இறுதியில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம் !

பீகார் மாநிலம் கயாவை சேர்ந்த ஆறு வயது சிறுவன் விவேக். இவர் அந்த பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த பள்ளியில் துர்கா பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன.

பூஜைக்கான ஆப்பிளை சாப்பிட்ட சிறுவன்.. கொடூரமாக தாக்கிய ஆசிரியர்.. இறுதியில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அப்போது அந்த பூஜைக்காக தட்டில் ஏராளமான பழங்கள் அடிக்கிவைக்கப்பட்டிருந்தது. அதனைக் கண்ட சிறுவன் விவேக் அங்கு இருந்த ஒரு ஆப்பிள் ஒன்றினை எடுத்து கடித்து சாப்பிட்டுள்ளார். இதனை அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பார்த்துள்ளார்.

பின்னர் சிறுவன் விவேக்கை ஒரு அறைக்குள் அழைத்து சென்று அங்கு தன் மனைவியோடு சேர்ந்து பூஜைக்காக வைத்திருந்த பழத்தை ஏன் சாப்பிட்டாய் என்று கேட்டு கொடூரமாக தாக்கியிள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவரை பள்ளி வளாகத்துக்கு வெளியே வீசியுள்ளனர்.

பூஜைக்கான ஆப்பிளை சாப்பிட்ட சிறுவன்.. கொடூரமாக தாக்கிய ஆசிரியர்.. இறுதியில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம் !

சிறுவன் பள்ளிக்கு வெளியே படுகாயங்களோடு கிடப்பதை கண்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சிறுவனின் பெற்றோர்க்கு தகவல் அளித்து மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் ஆசிரியரையும் அவரது மனைவியையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories