விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு ஆப்பு வைத்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் மரணம்.. நடந்தது என்ன ?

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் மரணத்தால் இங்கிலாந்து தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு ஆப்பு வைத்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் மரணம்.. நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் சில நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.

இவரின் மறைவை அடுத்து உலக தலைவர்கள் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு ஆப்பு வைத்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் மரணம்.. நடந்தது என்ன ?

ராணி எலிசபெத் இறந்ததையடுத்து பிரிட்டன் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கிறது. அரசு தொலைக்காட்சியான பிபிசியின் முகப்பு கருப்பாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், உலகின் பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் இவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்,

இந்த நிலையில், மகாராணி எலிசபெத்தின் மறைவால் இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் இங்கிலாந்து தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் முடிவுற்ற நிலையில், இரண்டாம் நாள் ஆட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தொடரில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வென்று சமநிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories