விளையாட்டு

71வது சர்வதேச சதம் - மனைவியை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி.. பேசியது என்ன?

ஆட்ட நாயகன் விருது வென்ற கோலி, தன்னுடைய மனைவி அனுஷ்கா ஷர்மா தனக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தார் எனக் கூறியுள்ளார்.

71வது சர்வதேச சதம் - மனைவியை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி.. பேசியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய அணி ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை என்றாலும், விராட் கோலியின் அசத்தலான ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. நீண்ட காலமாக அடைய முடியாஅல் இருந்த தன்னுடைய 71வது சர்வதேச சதத்தை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக எட்டி விட்டார் கோலி. சுமார் 1000 நாள்கள் கழித்து அந்த சாதனை மைல் கல்லை எட்டியிருக்கிறார் அவர். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 12 ஃபோர்களும், 6 சிக்ஸர்களும் விளாசினார் விராட். 53 பந்துகளில் சதமடித்து மிரட்டிய அவர், 61 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோராகவும் அது அமைந்தது.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற கோலி, தன்னுடைய மனைவி அனுஷ்கா ஷர்மா தனக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தார் என்று போட்டிக்குப் பிறகு கூறியிருந்தார் கோலி. அதுமட்டுமல்லாமல் தான் இந்த காலட்டத்தில் பல அரைசதங்கள் அடித்திருந்தபோதும் பலரும் அதை தோல்வியாகவே கருதியது ஆச்சர்யமளித்ததாகவும் கூறினார்.

71வது சர்வதேச சதம் - மனைவியை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி.. பேசியது என்ன?

"ஒரு முக்கியமான நபரை நான் குறிப்பிட்டிருந்தேன் - அனுஷ்கா - இந்த கடினமான காலகட்டத்தின் ஒவ்வொரு தருணத்திலும் என்னோடு இருந்தவர் அவர். இந்தக் கடினமான நாள்களில் என்னுடைய இன்னொரு பக்கத்தையும் பல மாதங்களாக பார்த்திருந்தார் அவர். அதனால் தான் அவரைக் குறிப்பிட்டேன். அவர் தான் ஒவ்வொரு விஷயங்களிலும் எனக்கு சரியானதைக் காட்டினார். சரியாக என்னை வழிநடத்தினார். அடுத்து என்ன செய்வது என்று சரியான வழிகாட்டுதல் அவரிடம் இருந்து வந்தது. அந்த பிரேக்கில் இருந்து வந்தபோது நான் ரிலாக்சான ஒரு ஆளாக திரும்பி வந்தென்.

இது முழுக்க முழுக்க என் ஆட்டத்தை அனுபவித்து ஆடுவதும், அதை புரிந்துகொள்வதும், கடவுள் நமக்கு என்ன அருள் புரிந்தார் என்பதும் தான். இந்தப் போட்டியில் நான் விளையாடியது, கடந்த சில போட்டிகளில் ஆடிய ஆட்டத்தின் தொடர்ச்சி தான். என்னுடைய வழக்கமான ஆட்டத்தை விட்டுவிட்டு மிகப்பெரிய ரிஸ்க் எடுத்தேன்.

71வது சர்வதேச சதம் - மனைவியை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி.. பேசியது என்ன?

என்னை நானே ஆச்சர்யப்படுத்திக்கொண்டேன். என்னை எது ஆச்சர்யப்படுத்தியது எனில், நான் அறுபது ரன்கள் எடுத்தது கூட தோல்வியாகவே பார்க்கப்பட்டது. அது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நன்றாக விளையாடி அணிக்கு பங்களிப்பது போதுமானதாக இருக்கவில்லை.

யாரையும், எதையும் நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை. இதற்கு முன்பு எனக்கு நல்ல விஷயங்களை கடவுள் அருளியிருக்கிறார். அதனால் தான் இந்த விஷயங்களை இப்போது பேசும் நிலையில் நான் இருக்கிறேன்" என்று போட்டி முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் தெரிவித்தார் விராட் கோலி.

banner

Related Stories

Related Stories