விளையாட்டு

IPL ஆட்டத்தின் அடிப்படையில் T20க்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதா? ஆதங்கத்தை கொட்டும் ரசிகர்கள்!

இந்திய அணியில் சில தேர்வுகள் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. சிலர் தேர்வு செய்யப்படாமல் போனது ரசிகர்களை ஆதங்கப்படவும் வைத்திருக்கிறது.

IPL ஆட்டத்தின் அடிப்படையில் T20க்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதா? ஆதங்கத்தை கொட்டும் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

நடப்பு ஐ.பி.எல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்நிலையில் இந்த ஐ.பி.எல் தொடருக்கு பிறகு நடக்கவிருக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த இந்திய அணியில் சில தேர்வுகள் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. சிலர் தேர்வு செய்யப்படாமல் போனது ரசிகர்களை ஆதங்கப்படவும் வைத்திருக்கிறது.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணி

கே.எல்.ராகுல், ருத்துராஜ் கெய்க்வாட், இஷன் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, வெங்கடேஷ் ஐயர், சஹால், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்சல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதில் அனைவருமே மகிழ்ச்சி. இந்த சீசனில் பெங்களூரு அணிக்காக ஒரு ஃபினிஷராக அசத்தியதன் விளைவாகவே அவருக்கு மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

IPL ஆட்டத்தின் அடிப்படையில் T20க்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதா? ஆதங்கத்தை கொட்டும் ரசிகர்கள்!

அதேபோல உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் தேர்வும் அனைவரின் கவனத்தையுன் ஈர்த்துள்ளது. உம்ரான் மாலிக் 150 கி.மீ க்கும் அதிகமான வேகத்தில் தொடர்ந்து சீராக பேட்ஸ்மேன்களை கடுமையாக திணற வைத்திருந்தார். அந்த வேகம்தான் உம்ரான் மாலிக்கிற்கான் இடத்தை வென்று கொடுத்திருக்கிறது.

அர்ஷ்தீப் சிங் அவரும் உம்ரான் மாலிக்கை போன்ற இளம் வீரர்தான். இடதுகை வேகப்பந்து வீச்சாளர். பஞ்சாப் அணிக்காக தனது யார்க்கர்களை துல்லியமாக இறக்கி கவனத்தை ஈர்த்தார். இந்த சீசனில் டெத் ஓவர்களில் ரொம்பவே எக்கனாமிக்கலாக வீசியிருக்கும் பௌலர் அவர்தான். இந்திய அணிக்கு ஒரு திடமான இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தேவை என்கிற அடிப்படையில் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த தேர்வுகளையெல்லாம் ரசிகர்களுமே ஆதரிக்கிறார்கள். ஆனால், சில வீரர்கள் தேர்வு செய்யப்படாமல் போனதிலும் ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றனர். குறிப்பாக சன்ரைசர்ஸ் அணியின் ராகுல் திரிபாதியும் ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சனையும் தேர்வு செய்யாதது ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.

ராகுல் திரிபாதி சன்ரைசர்ஸ் அணிக்காக நம்பர் 3 இல் இறங்கி பட்டையை கிளப்பியிருக்கிறார். 14 போட்டிகளில் 413 ரன்களை 158 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். சீராக அதே நேரத்தில் அதிரடியாகவும் சிறப்பாக ஆடியிருக்கிறார். இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணியின் மிகச்சிறந்த வீரர் யார் என்றால் ராகுல் திரிபாதியை கை காட்டலாம்.

அதேமாதிரி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சனும் சிறப்பாகவே ஆடியிருக்கிறார். 14 போட்டிகளில் 374 ரன்களை 147 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார். பட்லருக்கு பிறகு ராஜஸ்தான் அணியில் அதிக ரன்களை எடுத்த வீரராக இருக்கிறார்.

இவர்கள் இருவரும் நன்றாக பெர்ஃபார்ம் செய்தும் ஏன் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது. அதேநேரத்தில், இந்த ஐ.பி.எல் சீசனில் சுமாராக ஆடி அணியிலிருந்தே ட்ராப் செய்யப்பட்ட வெங்கடேஷ் ஐயருக்கெல்லாம் ஏன் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

இந்த அணியானது ஐ.பி.எல் பெர்ஃபார்மென்ஸ்களின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஐ.பி.எல் க்கு முன்பு நடந்த தொடர்களில் ஆடிய அணியின் தொடர்ச்சியே. அந்த அணிகளை அப்படியே மாற்றாமல் ஒரு சீரான தன்மையோடு குறைந்தபட்ச மாற்றங்களோடு அணித்தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பிசிசிஐக்கு ஆதரவாகவும் ஒரு தரப்பு பேசி வருகிறது.

எது எப்படியோ இந்த அணித்தேர்வு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல, வருத்தத்தையும் சேர்த்தே கொடுத்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

banner

Related Stories

Related Stories