விளையாட்டு

IPL 2022 : ரிஷப் பண்ட் செய்த தவறுகளால் வெளியேறிய டெல்லி - மகிழ்ச்சியில் பெங்களூரு; குதூகலத்தில் RCB!

IPL 2022 : ரிஷப் பண்ட் செய்த தவறுகளால் வெளியேறிய டெல்லி - மகிழ்ச்சியில் பெங்களூரு; குதூகலத்தில் RCB!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. இந்த சீசனிலேயே இந்த போட்டி ரொம்பவே முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஏனெனில், ப்ளே ஆஃப்ஸூக்கு தகுதிப்பெறப்போகும் நான்காவது அணி எது என்பதை இந்த போட்டியே தீர்மானிக்கும் இடத்தில் இருந்தது. டெல்லி வென்றால் டெல்லி ப்ளே ஆஃப்ஸிற்கு முன்னேறும். அதே நேரத்தில் மும்பை வென்றால் பெங்களூரு அணி ப்ளே ஆஃப்ஸிற்கு முன்னெறும். இப்படியான சூழலில் நடந்த இந்த போட்டியை மும்பை அணி வென்றிருக்கிறது. இதன் மூலம் பெங்களூரு அணி ப்ளே ஆஃப்ஸிற்கு தகுதிப் பெற்றிருக்கிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழந்திருக்கிறது. டெல்லியின் தோல்விக்கு டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் எடுத்த சில தவறான முடிவுகளும் அவர் செய்த ஒரு கேட்ச் ட்ராப்பும் மிக முக்கிய காரணமாக இருந்தது.

160 ரன்களை மும்பை அணி சேஸ் செய்த போது அந்த அணிக்கும் தொடக்கம் சரியாக அமைந்திருக்கவில்லை. மும்பையின் கேப்டனான ரோஹித் சர்மா 13 பந்துகளில் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆகியிருந்தார். பவர் ப்ளேயில் மும்பை அணி ரோஹித்தின் விக்கெட்டோடு 27 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. மெதுவான தொடக்கமே.

பவர் ப்ளே முடிந்து ஸ்பின்னர்கள் வந்த பிறகே இஷன் கிஷனும் ப்ரெவீஸூம் அதிரடியில் இறங்கினர். ஸ்பின்னர்களின் ஓவர்களில் சிக்சர்களாக பறக்கவிட்டனர். ரன்ரேட்டும் வேகமாக உயர தொடங்கியது. இந்த சமயத்தில்தான் 12வது ஓவரில் குல்தீப் யாதவின் பந்தில் இஷன் கிஷன் பெரிய ஷாட்டுக்கு முயன்று அவுட் ஆகியிருந்தார். அதே ஓவரில் ப்ரெவீஸூம் ஒரு பெரிய ஷாட்டுக்கு முயன்று ஒரு கேட்ச்சை கொடுத்தார். எளிமையான அந்த கேட்ச்சை ரிஷப் பண்ட் ட்ராப் செய்தார். இந்த கேட்ச் ட்ராப்புக்கு பிறகு ஒரு 12 ரன்களை அடித்துவிட்டுதான் ப்ரெவீஸ் அவுட் ஆகியிருந்தார். ப்ரெவீஸ் ஷர்துல் தாகூர் வீசிய 15வது ஓவரில் அவுட் ஆகியிருந்தார். அதே ஓவரில் க்ரீஸூக்குள் வந்த டிம் டேவிட் முதல் பந்திலேயே எட்ஜ் ஆகி கீப்பரான பண்டிடம் கேட்ச் ஆனார். ஆனால், அம்பயர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை.

டெல்லிக்கு ரிவியூவ் எடுக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், ரிஷப் பண்ட் மட்டுமே அவுட் என்பதில் உறுதியாக இருந்தார். மற்ற வீரர்கள் அவ்வளவாக திருப்தியாக இல்லை. இதனால் ரிஷப் பண்ட்டும் ரிவியூவ் எடுக்கும் முடிவிலிருந்து பின் வாங்கினார். பிறகு, ரீப்ளேவில் பார்க்கும்போதுதான் தெரிந்தது, பந்து நன்றாகவே பேட்டை உரசி சென்றிருந்தது. அந்த ரிவியூவ் மட்டும் எடுக்கப்பட்டிருந்தால் டிம் டேவிட் டக் அவுட் ஆகியிருப்பார். அது நிகழாததால் தொடர்ந்து ஆடிய டிம் டேவிட் 11 பந்துகளில் 34 ரன்களை எடுத்து அதகளப்படுத்தியிருப்பார். மும்பையும் பெரிய சிரமமின்றி வெல்வதற்கு காரணமாக அமைந்தார்.

'இன்னும் 5 ஓவர்தான் மீதமிருக்கிறது. டிம் டேவிட் பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கிறார். கையில் 2 ரிவியூவ்கள் இருக்கிறது. அதை எந்த யோசனையுமின்றி பயன்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட டெல்லிக்கு இல்லை' என ரவிசாஸ்திரி டெல்லியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஸ்பின்னர்களான குல்தீபும் அக்சரும் 7 ஓவர்களை வீசி 59 ரன்களை கொடுத்திருந்தனர். இருவரின் ஓவர்களிலும் மும்பை பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடியிருந்தனர். இப்படியான சூழலில் இருவரையும் தொடர்ச்சியாக 7 ஓவர்கள் வீச வைத்ததற்கு பதிலாக இடையில் ஒன்றிரண்டு ஓவர்களை வேறு யாருக்காவது கொடுத்திருக்கலாம். ஆறாவது பௌலரான மிட்செல் மார்ஸ் நன்றாகத்தான் வீசியிருந்தார். அவருக்கு கொடுத்திருக்கலாம் அல்லது ஷர்துல் தாகூரை கொஞ்சம் முன்னமே அழைத்து வந்திருக்கலாம்.

இப்படி டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் எடுத்த சில முடிவுகள் அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

banner

Related Stories

Related Stories