விளையாட்டு

திடீரென சரியும் பெங்களூருவின் எஃகு கோட்டை: கவலையில் KING KHOLI #IPL2022

நடப்பு ஐ.பி.எல் தொடரில் வெற்றிகளை பெற்று வந்த பெங்களூரு அணி தற்போது அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியடைந்து வருகிறது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

திடீரென சரியும் பெங்களூருவின் எஃகு கோட்டை: கவலையில் KING KHOLI #IPL2022
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியிருக்கிறது. கடந்த போட்டியை போன்றே இந்த போட்டியிலும் பெங்களூரு அணி பேட்டிங்கில் கடுமையாக சொதப்பி தோற்றிருக்கிறது.

முதலில் ராஜஸ்தான் அணியே பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் அந்த அணி 144 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பெங்களூரு அணிக்கு 145 ரன்கள்தான் டார்கெட். ஆனால், அந்த 145 ரன்களை கூட அந்த அணியால் எடுக்க முடியவில்லை. 19.3 ஓவர்களில் 115 ரன்களிலேயே பெங்களூரு அணி ஆல் அவுட் ஆகியிருக்கிறது. கடந்த போட்டியில் சன்ரைசர்ஸுக்கு எதிராக 68 ரன்களில் பெங்களூரு ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்த சீசனில் ஒரு அணி எடுத்த மிகக்குறைவான ஸ்கோர் இதுதான். அதேமாதிரி, இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 144 ரன்களை டிஃபண்ட் செய்திருக்கிறது. இந்த சீசனில் வேறெந்த அணியும் இவ்வளவு குறைவான ஸ்கோரை டிஃபண்ட் செய்ததே இல்லை. அந்த பெருமையை ராஜஸ்தான் அணி பெறுவதற்கும் பெங்களூரு அணி மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அபாயகரமான பேட்ஸ்மேனான பட்லரை பெங்களூரு அணியின் பௌலர்கள் வெகு சீக்கிரமாகவே வீழ்த்திவிட்டனர். இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியை வைத்திருக்கும் ஜோஸ் பட்லர் 9 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே எடுத்து ஹேசல்வுட்டின் பந்தில் அவுட் ஆகியிருந்தார். ஸ்லிப், தேர்டுமேன் வைத்து ஆப் சைடை முழுவதுமாக அடைத்து டீப் ஸ்கொயர் லெக் வைத்து ஹேசல்வுட் வீசிய குட் லெந்த் டெலிவரியை மிட் ஆனின் தலைக்கு மேல் க்ளியர் செய்ய பட்லர் விரும்பினார். ஆனால், அது மிட் ஆனில் நின்ற சிராஜிடம் கேட்ச் ஆனது. இந்த சீசனில் முதல் முறையாக பட்லர் சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆனார்.

திடீரென சரியும் பெங்களூருவின் எஃகு கோட்டை: கவலையில் KING KHOLI #IPL2022

படிக்கல், அஷ்வின் போன்ற பட்லரின் சக பேட்ஸ்மேன்களும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை..இவர்களை சிராஜ் வீழ்த்தியிருந்தார். கொஞ்சம் நன்றாக ஆடியிருந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் வனிந்து ஹசரங்காவின் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்று கேட்ச் ஆனார்.

ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி ஸ்கோரை முன்னெடுத்து செல்ல கடுமையாக திணறியது. இரண்டாம் பத்தாவது ஓவரில் தொடர்ச்சியாக 44 பந்துகளுக்கு பவுண்டரியே அடிக்காமல் சொதப்பியிருந்தது. ஒரு 120 ரன்களை எடுத்தாலே ஆச்சர்யம் எனும் சூழலே நிலவியது. ஆனாலும், ராஜஸ்தான் அணி 144 ரன்களை எட்டியது. காரணம், ரியான் பராக். ஒரு முனையில் விக்கெட்டுகழ் வேகமாக விழுந்தாலும் இன்னொரு முனையில் ரியான் பராக் மிகச்சிறப்பாக நின்று விக்கெட்டை காத்து ஆடினார்.

டெத் ஓவர்கள் வரை நின்று ஆடிவிட்டு, கடைசிக்கட்டத்தில் அதிரடி காட்ட வேண்டும் என்பதே அவரின் திட்டம். அதை மிகச்சிறப்பாக செயல்படுத்தியும் காட்டினார். கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக பவுண்டரிக்களையும் சிக்சர்களையும் பறக்கவிட்டிருந்தார். ஹர்சல் படேல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 18 ரன்களை அடித்திருந்தார். இன்னிங்ஸின் கடைசி பந்தை சிக்சரோடு முடித்திருந்தார். 31 பந்துகளில் 56 ரன்களை அடித்து நாட் அவுட்டாகவும் இருந்தார்.

19 வது ஓவரில் ஹேசல்வுட்டின் பந்தில் ரியான் பராக் ஒரு எளிமையான கேட்ச்சை கொடுத்திருந்தார். அதை வனிந்து ஹசரங்கா கோட்டைவிட்டிருந்தார். அந்த கேட்ச் ட்ராப்புக்கு பிறகு மட்டும் பராக் 24 ரன்களை சேர்த்திருந்தார். அந்த கேட்ச் சரியாக பிடிக்கப்பட்டிருந்தால் ராஜஸ்தான் 120-125 ரன்னுக்குள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். கேட்ச் ட்ராப்பால் அது நிகழாமல் போனது.

திடீரென சரியும் பெங்களூருவின் எஃகு கோட்டை: கவலையில் KING KHOLI #IPL2022

145 ரன்கள் டார்கெட்டை நோக்கி பெங்களூரு அணி சேஸிங்கை தொடங்கியது. நீண்ட காலம் கழித்து கோலி ஓப்பனராக களமிறங்கியிருந்தார். நம்பர் 3 யில் இறங்கி தொடர்ச்சியாக சொதப்பியதால் ஓப்பனராக ப்மோட் செய்யப்பட்டார். ஓப்பனிங்கில் விராட் கோலியின் ஆவரேஜ் மட்டும் 43 க்கும் மேல் இருக்கிறது. விராட் கோலியின் ஐ.பி.எல் கரியரில் அவரின் 2016 சீசன் தான் அவரின் பெஸ்ட் சீசனாக இருக்கிறது. அந்த சீசனில் 973 ரன்களை எடுத்திருப்பார். ஓப்பனிங் இறங்கியே இதை சாதித்திருப்பார். ஆக, இப்போது அவுட் ஆஃப் ஃபார்மிலிருந்து மீளும் பொருட்டு கோலி மீண்டும் ஓப்பனிங் ஸ்பாட்டில் இறங்கியிருந்தார். குறைவான ஸ்கோர் என்பதால் கோலி நின்று நிதானமாக செட்டில் ஆகி பெரிய இன்னிங்ஸை ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. வெறும் 10 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 9 ரன்களில் பிரஷீத் கிருஷ்ணாவின் பந்தில் பாயிண்ட்டில் கேட்ச் ஆனார். இந்த சீசனில் விராட் கோலியின் 5 வது சிங்கிள் டிஜிட் டிஸ்மிசல் இது.

விராட் கோலி அவுட் ஆன பிறகு 7 வது ஓவரில் டூப்ளெஸ்சிஸும் மேக்ஸ்வெல்லும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இந்த ஓவரை இளம் வீரரான குல்தீப் சென் வீசியிருந்தார். இந்த ஓவர்தான் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த வீழ்ச்சியிலிருந்து பெங்களூரு அணியால் கடைசி வரை மீள முடியவில்லை. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கும் ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

வலுவான அணியாக தொடர் வெற்றிகளை குவித்துக் கொண்டிருந்த ஒரு அணி திடீரென இப்படி தொடர்ந்து சொதப்புவது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories