விளையாட்டு

இது ஐ.பி.எல் சபதம்... வைரலாகும் RCB தீவிர ரசிகையின் செயல்.. கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி!

இது ஐ.பி.எல் சபதம்... வைரலாகும் RCB தீவிர ரசிகையின் செயல்.. கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"ஐ.பி.எல் கோப்பையை பெங்களூரு அணி வெல்லும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்" என பெங்களூரு அணி தீவிர ரசிகையின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நேற்று நவிமும்பை டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இது ஐ.பி.எல் சபதம்... வைரலாகும் RCB தீவிர ரசிகையின் செயல்.. கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி!

இந்த நிலையில் போட்டிக்கு இடையே ரசிகர்கள் இருக்கையில் அமர்ந்திருந்த ரசிகை ஒருவர் ஒரு பதிவுடன் பெங்களூரு அணி மீதான தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.

அதில், ”ஐ.பி.எல் கோப்பையை பெங்களுரு அணி வெல்லும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்ற ஒரு பதிவுடன் கூடிய பதாகையை அவர் கையில் வைத்து பெங்களூரு அணிக்காக தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

அவரின் இந்த பதிவுடன் கூடிய புகைப்படம்தான் தற்போது சமூக வலைதளத்திலும் வைரலாகி, அது தொடர்பாக மீம்களும் பதிவிடப்பட்டு வருகிறது.

இதனிடையே ஆர்.சி.பி அணியின் தீவிர ரசிகையின் போட்டோவை பகிர்ந்த பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் “ அந்த பெண்ணின் பெற்றோரை நினைத்து வருந்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories