விளையாட்டு

ஹாட்ரிக் தோல்வி - பேட்டிங்கில் சொதப்பும் சென்னை : இனி CSK அணிக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது ரசிர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஹாட்ரிக் தோல்வி - பேட்டிங்கில் சொதப்பும் சென்னை : இனி CSK அணிக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பவர்ப்ளேயில் விக்கெட்டுகள் கிடைக்காதது சென்னை அணியின் சொதப்பல்களுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது. கொல்கத்தாவிற்கு எதிரான முதல் போட்டியில் 131 ரன்களை டிஃபண்ட் செய்ய வேண்டிய சூழலிலும் சென்னை அணி பவர்ப்ளேயில் விக்கெட்டுகளே எடுக்கவில்லை. அடுத்து லக்னோவிற்கு எதிரான போட்டியில் 210 ரன்களை டிஃபண்ட் செய்ய வேண்டிய சூழலிலும் சென்னை அணி பவர்ப்ளேயில் விக்கெட்டுகளே எடுக்கவில்லை.

பஞ்சாபிற்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்த நிலைமை மாறியிருந்தது. சென்னை அணி பவர்ப்ளேயில் இரண்டு விக்கெட்டுகளௌ வீழ்த்தியிருந்தது. முதல் ஓவரிலேயே முகேஷ் சௌத்ரி மயங்க் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். பனுகா ராஜபக்சேவை தோனி அட்டகாசமாக ரன் அவுட் ஆக்கியிருந்தார்.

கடந்த இரண்டு போட்டிகளில் கிடைக்காத பவர்ப்ளே விக்கெட்டுகள் இந்த போட்டியில் சென்னை அணிக்கு கிடைத்திருந்தது. ஆனால், அந்த விக்கெட்டுகள் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவே இல்லை. ஏனெனில், விக்கெட்டுகளுக்கு ஈடாக சென்னை அணி 6 ஓவர்களில் 72 ரன்களௌ வாரி வழங்கியிருந்தது. லியாம் லிவிங்க்ஸ்டன் வெளு வெளுவென வெளுத்திருந்தார். முகேஷ் சௌத்ரி ஒரே ஓவரில் 26 ரன்களை கொடுத்திருந்தார்.

பின்வரிசையில் விக்கெட்டுகளை வேகமாகவிட்டு சொதப்பிய போதும் பஞ்சாப் 180 ரன்களை எடுத்ததற்கு இந்த பவர்ப்ளே ஓவர்களே மிக முக்கிய காரணமாக அமைந்தது. ஆக, இந்த போட்டியிலும் தீபக் சஹாரின் இடத்தை வேறு எந்த சென்னை பௌலர்களாலும் நிரப்ப முடியவில்லை.

ஹாட்ரிக் தோல்வி - பேட்டிங்கில் சொதப்பும் சென்னை : இனி CSK அணிக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?

ஸ்கோரை சேஸ் செய்ய வேண்டும் என்பதே சென்னையின் விருப்பம். அது இந்த போட்டியில் டாஸில் வென்றதின் மூலம் நடந்திருந்தது. ஆனால், அதனாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. பௌலிங் பவர்ப்ளேயில் சொதப்பியது என்றால் பேட்டிங்கில் பவர்ப்ளே, மிடில், டெத் என அத்தனையும் சொதப்பல்தான். 18 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆல் அவுட்டே ஆகிவிட்டனர். இடையில் சிவம் துபே ஆடிய ஒரு சில ஓவர்களை தவிர மற்ற இடங்களில் சென்னை பேட்டர்கள் போட்டியளிக்கும் வகையில் கூட ஆடியிருக்கவில்லை.

பவர்ப்ளேயில் 27 ரன்களை மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். அறிமுக போட்டியில் ஆடிய வைபவே சென்னை அணியின் பேட்டர்களை காலி செய்ய போதுமானவராக இருந்தார். சிவம் துபே ஓரளவுக்கு அதிரடி காட்டிக் கொண்டிருந்த நிலையில் டெத் ஓவருக்குள் மேட்ச் செல்ல இருந்த சூழலில் பார்ட் டைமரான லிவிங்ஸ்டனின் ஒரே ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகளை விட்டு மேட்ச்சை கோட்டை விட்டிருந்தனர்.

சென்னையின் பேட்டிங் லைன் அப்பை சரிக்க பஞ்சாபுக்கு ஒரு அறிமுக வீரரும் ஒரு பார்ட் டைமருமே போதுமானவர்களாக இருந்தனர். 54 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்றிருக்கிறது. சென்னை அணியின் வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய தோல்வி இது.

ஹாட்ரிக் தோல்வி - பேட்டிங்கில் சொதப்பும் சென்னை : இனி CSK அணிக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?

வழக்கமாக சென்னை அணியின் ப்ளேயிங் லெவனில் மாற்றங்களே இருக்காது. ஆனால், இந்த சீசனில் ஆடியிருக்கும் மூன்று போட்டிகளிலும் சென்னை அணிக்கு வெவ்வேறு ப்ளேயிங் லெவன்கள் மாறியிருக்கிறது. காரணம், தீபக் சஹாரின் இல்லாமை. பவர்ப்ளே ஸ்பெசலிஸ்ட்டான தீபக் சஹார் இல்லாததால் மூன்று போட்டிகளிலுமே பௌலிங் லைன் அப்பில் தொடர் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், எதுவுமே கைக்கொடுக்கவில்லை.

சென்னை அணியிடம் தீபக் சஹாருக்கு பதில் அவர் இடத்தை அப்படியே நிரப வேறு வீரர்கள் யாரும் இல்லை. ஆக, தீபக் சஹார் சீக்கிரமே ரிட்டர்ன் ஆக வேண்டும். ருத்துராஜ் முதல் மூன்று போட்டிகளில் அடிக்கவே மாட்டார். இந்த சீசனிலும் அந்த ட்ரெண்ட் தொடர்ந்திருக்கிறது. நான்காவது போட்டியிலிருந்து ருத்துராஜ் ஃபார்முக்கு வருவார் என நம்பப்படுகிறது. அது நிகழ வேண்டும். ருத்துராஜ் கெய்க்வாட்டும் ஃபார்முக்கு வர வேண்டும். தீபக் சஹாரையும் சீக்கிரம் கூட்டி வர வேண்டும். சிஎஸ்கேவும் சீக்கிரம் ஃபார்முக்கு வர வேண்டும்!

banner

Related Stories

Related Stories